Lokesh kanagaraj: ரொம்ப வருஷத்துக்கு பிறகு ரஜினியை அப்படி காட்டப்போறேன்.. லோகேஷ் சொன்ன விஷயம்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவுள்ளது தலைவர் 171 படம்.
இந்தப் படத்தின் கதைக்களத்தை உருவாக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், இந்த ஸ்டோரியை ரஜினியிடம் கூறி லியோ படத்தின் சூட்டிங்கின்போதே ஓகே வாங்கிவிட்டார்.
தற்போது தலைவர் 171 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை மேற்கொண்டுவரும் லோகேஷ் கனகராஜ் அந்தப் படம் குறித்து தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் அதிகமான வரவேற்பை கொடுத்திருந்த நிலையில் படம் மிகப்பெரிய வசூலையும் வாரிக் குவித்துள்ளது. படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 600 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலை குவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வெற்றியை மிகப்பெரிய அளவில் கொண்டாடியுள்ளது தயாரிப்புத் தரப்பு.
ஜெயிலர் டூ வேட்டையன்: இந்நிலையில் ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினியின் லால் சலாம் படம் ஜனவரியில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தறபோது வேட்டையன் என்ற படத்தில் டிஜே ஞானவேல் இயக்கத்தில் இணைந்து நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக மக்கள் பிரச்சினையை ரஜினி கையிலெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தலைவர் 171 படம்: இந்தப் படத்தில் பகத் பாசில், துஷாரா விஜயன், ராணா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். பகத் பாசில் இந்தப் படத்தில் ரஜினியின் மகனாக நடித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜூடன் தலைவர் 171 படத்திலும் ரஜினிகாந்த் கமிட்டாகியுள்ளார். இந்தப் படம் அதிரடி ஆக்ஷன் திரில்லராக உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் கதையை ரஜினியிடம் சொல்லி லியோ சூட்டிங்கின்போதே லோகேஷ் ஓகே வாங்கியுள்ளார்.
வாழ்த்திய கமல்ஹாசன்: இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலையை லோகேஷ் கனகராஜ் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இந்த பிராஜெக்ட்டிற்காக தன்னை முதலில் நடிகர் கமல்ஹாசன்தான் வாழ்த்தியதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தன்னுடைய தயாரிப்பில் உருவாகியுள்ள ஃபைட் கிளப் படத்தின் பிரமோஷனின்போது பேசிய லோகேஷ் கனகராஜ் இதனை தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் முக்கியமான விஷயத்தை தான் மேற்கொண்டு அதை ரஜினியிடம் கூறி ஓகே வாங்கிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி கண்டுபிடித்துவிடுவார்: இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை இன்னும் 2 அல்லது மூன்று மாதங்களில் தான் நிறைவு செய்துவிடுவேன் என்றும் ஏப்ரல் மாதத்தில் சூட்டிங் துவங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் வேலைகள் குறித்து தொடர்ந்து தனக்கு கால் செய்து ரஜினி கேட்டறிவார் என்றும் தான் ஏதாவது வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டாலும் அதை அவர் கண்டுபிடித்துவிடுவார் என்றும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.
வித்தியாசமான ஜானர்: இந்தப் படத்தில் அதிகமான ஆக்ஷன் காட்சிகளை தான் பயன்படுத்த உள்ளதாகவும் நீண்ட காலங்களுக்கு பிறகு அதிகமான ஆக்ஷன் காட்சிகளில் ரஜினியை பார்க்கலாம் என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதுவரை முயற்சிக்காத வித்தியாசமான ஜானரில் இந்தப் படத்தை இயக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை கேட்டுவிட்டு அவர் அதிகமான உற்சாகமும் மகிழ்ச்சியையும் அடைந்ததாகவும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











