Lokesh kanagaraj: டைரக்ஷன்.. தயாரிப்பு.. அதிரடி சரவெடிக்கு தயாராகும் லோகேஷ் லைன் அப்ஸ்!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் அதிரடி சரவெடியாக அமைந்தது. விஜய் கேரியரில் அதிகமாக வசூலை ஈட்,டிய படமாக லியோ சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படம் உருவாகவுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சூட்டிங் துவங்கவுள்ள இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை தற்போது லோகேஷ் கனகராஜ் மேற்கொண்டு வருகிறார். விரைவில் இந்த வேலைகளை நிறைவு செய்துவிட்டு படத்தின் பிரீ புரொடக்ஷன் வேலைகளை அவர் துவங்கவுள்ளார்.

இதனிடையே ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ள லோகேஷ் கனகராஜ், ஃபைட் கிளப் என்ற படத்தையும் தயாரித்து ரிலீஸ் செய்திருந்தார். அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் தன்னுடைய பேனரில் அடுத்தடுத்த படங்களை வெளியிட லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். ஒருபுறம் இயக்குநராகவும் மற்றொரு வகையில் தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் முன்னதாக பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.

Director Lokesh kanagaraj plans next to next movie in his Direction and Productions

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: மாநகரம் என்ற படத்தின்மூலம் தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கியவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இந்தப் படங்களில் LCU என்ற அம்சத்தை செயல்படுத்தி, ரசிகர்கள் அதிகமாக அதுகுறித்து பேசும்படி செய்துள்ளார். அடுத்ததாக ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் லோகேஷ் பிசி. சென்னையில் இருந்தபடி இந்த ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

தலைவர் 171 படம்: மேலும் இந்த வேலைகளை வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவு செய்துவிட்டு, ஏப்ரல் மாதத்தில் தலைவர் 171 படத்தின் சூட்டிங்கை துவங்குவார் என்று முன்னதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. லியோ படத்தில் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு சூட்டிங்கை மேற்கொண்டதால் அதிகப்படியான டென்ஷனை சந்தித்ததாகவும் அதனால் தலைவர் 171 படத்தில் இந்தவிதமான டென்ஷன் இல்லாமல் ரிலாக்ஸாக படத்தை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள், டைட்டில் உள்ளிட்ட அப்டேட்கள் ஏப்ரல் மாதத்தில்தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம்: இதனிடையே தயாரிப்பாளராகவும் ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை அறிவித்துள்ளார். ஜி ஸ்குவாட் நிறுவன தயாரிப்பாக ஃபைட் கிளப் படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், படம் வசூலில் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களின் தயாரிப்பில் ஜி ஸ்குவாட் மூலம் லோகேஷ் ஈடுபடவுள்ளார். அடுத்ததாக ரத்னகுமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் இணையவுள்ள படத்தினை லோகேஷ் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அந்த படம் கைவிடப்பட்டதாக தெரிகிறது.

அடுத்தடுத்த படங்கள்: இதனிடையே கைதி படத்தின் இன்ஸ்பெக்டர் பிஜோய் கேரக்டரையொட்டி ஒரு படத்தையும் ஹரீஷ் உத்தமன் லீட் கேரக்டரில் நடிக்கவுள்ள அடைக்கலம் என்ற படத்தையும் விக்ரம் படத்தின் முக்கிய கவனம் பெற்ற ஏஜெண்ட் டீனா என்ற படத்தையும் அடுத்தடுத்து லோகேஷ் கனகராஜ் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்து தன்னுடைய அசிஸ்டெண்ட் இயக்குநர்கள் இயக்கத்தில் 4 படங்களை தயாரிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே முன்னணி நடிகர் ஒருவர் இணையும் படத்தையும் லோகேஷ் தயாரிக்கவுள்ளதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

லோகேஷ் இயக்கத்தில் படங்கள்: இதனிடையே லோகேஷ் இயக்கத்தில் அடுத்ததாக தலைவர் 171 படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து கார்த்தி லீட் கேரக்டரில் நடிக்க கைதி 2 படத்தையும் கமல் லீட் கேரக்டரில் நடிக்க விக்ரம் 2 படத்தையும் லோகேஷ் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து பகத் பாசிலின் ஏஜெண்ட் அமர் படம், லியோ 2 படம் என அடுத்தடுத்து லோகேஷ் இயக்குவார் என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து சூர்யா லீட் கேரக்டரில் நடிக்கும் ரோலக்ஸ், இரும்புக்கை மாயாவி படங்களும் அவரது லைன் அப்பில் உள்ளன. இதனிடையே, லோகேஷ் நடிப்பில் சிங்கப்பூர் சலூன் படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X