அடுத்ததாக தளபதி 67க்கு தயாராகும் லோகேஷ் கனகராஜ்.. விஜய்க்கு ஹீரோயின் யார் தெரியுமா?

சென்னை : நடிகர் விஜய் தற்போது தனது தளபதி 66 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இரண்டு கட்ட சூட்டிங்குகள் நடந்து முடிந்துள்ளன.

படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணையவுள்ள தளபதி 67 படம் குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 66 படம்

தளபதி 66 படம்

நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஷாம் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் அவருடன் இணைந்துள்ளனர்.

லோகேஷ் இயக்கத்தில் விஜய்

லோகேஷ் இயக்கத்தில் விஜய்

குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. மேலும் விஜய் படங்களுக்கேயுரிய ஆக்ஷன், காமெடியும் படத்தில் சிறப்பாக இருக்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ முன்னதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

2வது முறையாக கூட்டணி

2வது முறையாக கூட்டணி

முன்னதாக விஜய் -லோகேஷ் கூட்டணி மாஸ்டர் படத்தில் இணைந்திருந்த நிலையில், அந்தப் படத்தில் தான் விஜய் ரசிகர்கள் மற்றும் அவரது மார்க்கெட் உள்ளிட்டவற்றிற்காக சமரசம் செய்துக் கொண்டதாகவும் விஜய் படத்தை மிஸ் செய்ய விரும்பாமல் தன்னுடைய ஸ்டைலில் 50 சதவிகிதமும் விஜய் ஸ்டைலில் 50 சதவிகிதமுமாக அந்தப் படத்தை இயக்கியதாகவும் லோகேஷ் தெரிவித்திருந்தார்.

100 சதவிகித லோகேஷ் படம்

100 சதவிகித லோகேஷ் படம்

இந்நிலையில் தளபதி 67 படம் முழுக்க முழுக்க தன்னுடைய 100 சதவிகித படமாக அமையும் என்றும் லோகேஷ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். தற்போது லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் படம் லோகேஷின் 100 சதவிகித படமாக வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு ஜோடியாகும் சமந்தா?

விஜய்க்கு ஜோடியாகும் சமந்தா?

இந்நிலையில் தளபதி 67 படத்தின் நாயகி யாராக இருக்கும் என்று ரசிகர்கள் தங்களது யூகங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். விஜய்க்கு இந்தப் படத்தில் சமந்தா ஜோடியாகவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கத்தி, தெறி, மெர்சல் படங்களில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

சிம்ரனுக்கு பிறகு விஜய்க்கு அழகான ஜோடியாக அமைந்தவர் சமந்தா. இந்நிலையில் இந்த ஜோடி மீண்டும் இணைந்தால் அது சிறப்பான சம்பவமாக இருக்கும் என்பதே ரசிகர்களின் கணிப்பு. தளபதி 67 படத்தின் சூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

Vikram Public Review | Kamal Haasan | VijaySethupathi | Lokesh Kanagaraj | #vikramfdfs
அடுத்தடுத்த வெற்றிகள்

அடுத்தடுத்த வெற்றிகள்

சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் முடியவுள்ளது. சமந்தா நடிப்பில் சமீபத்தில் தமிழில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது. அடுத்தடுத்த ஹிட்களை சமந்தா கொடுத்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X