Lokesh kanagaraj: லியோவை விட தலைவர்171 படம் ஒருபடி மேலதான்.. ரகசியம் சொன்ன லோகேஷ்!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தை எடுத்து முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தின் தலைவர்171 படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார்.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். லியோ படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் இணையவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

தலைவர்171 படத்தில் பயன்படுத்தப்படவுள்ள ஐமேக்ஸ் கேமரா குறித்து லோகேஷ் வெளிப்படை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகி வரும் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள லியோ படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்தப் படத்தில் புக்கிங்குகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பே வெளிநாடுகளில் துவங்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. தமிழகத்திலும் வரும் 15ம் தேதி லியோ டிக்கெட் புக்கிங் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன்கள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களால் விஜய் ரசிகர்கள் திண்டாடி வருகின்றனர். படம் கடந்த பிப்ரவரியில் சூட்டிங் துவங்கப்பட்டதில் இருந்தே லியோ திருவிழாவாக உள்ளது. அடுத்தடுத்த வீடியோக்கள், அப்டேட்கள், புகைப்படங்கள், கிளிம்ப்ஸ், பாடல்கள், ட்ரெயிலர் என தொடர்ந்து மாஸாக வெளியாகி ரசிகர்களை கட்டிப் போட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. படத்தின் ரிலீசை திருவிழாவாக கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படத்தின் ட்ரெயிலர் ரிலீசின்போதே, திரையரங்குகளில் சேதம் ஏற்படும்வகையில் சில சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், லியோ படத்தின் ரிலீசின்போது ரசிகர்களின் உற்சாகம் கரைபுரண்டு ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்கும்வகையில்தான் படத்தின் இசை வெளியீடும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது தற்போதைய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் படத்தில் ரசிகர்களை கவரும் பல்வேறு அம்சங்கள் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் லோகேஷ் கூறியுள்ளார். இந்தப் படம் சாதாரணமான கேமிராவில் படமாக்கப்பட்டு ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஆனால் தான் இயக்கவுள்ள அடுத்தப்படமான தலைவர் 171 படத்தின் பல காட்சிகளை இந்த ஐமேக்ஸ் தொழில்நுட்ப கேமிராவை வைத்தே சூட் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்தப் படத்திலும் மனோஜ் பரமஹம்சா தான் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளதாகவும் இதனால் படத்தின் தரம் மிகப்பெரிய அளவில் அமையும் என்றும் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த பார்வை அனுபவத்தை தலைவர் 171 படம் கொடுக்கும் என்றும் லோகேஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தற்போது 35 எம்எம் தொழில்நுட்பத்தில் ஏறக்குறைய அனைத்துப் படங்களும் எடுக்கப்பட்டுவரும் நிலையில், ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தை ஒருசில படங்கள் பயன்படுத்தி வருகின்றன. இதற்கான கேமராக்களை தலைவர்171 படத்தில் பயன்படுத்த உள்ளதாக லோகேஷ் தெரிவித்துள்ளது, கோலிவுட்டில் அடுத்தக்கட்டத்திற்கான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இதன்மூலம் படங்களின் தரம் மேலும் அதிகரிக்கும். கொடுக்கும் காசிற்கு சிறப்பான அனுபவத்தை ரசிகர்களும் பெற முடியும்.


Click it and Unblock the Notifications











