Rajinikanth: தூள் கிளப்புறோம் கண்ணா.. தலைவர் 171 கதையை கேட்டு தன்னோட ஸ்டைலில் ரஜினி உற்சாகம்!

சென்னை: விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படம் மிகச்சிறப்பான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தின் வசூல் 1000 கோடி ரூபாய்களை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜவான் படத்தை தொடர்ந்து 1000 கோடி ரூபாய் கிளப்பில் லியோ இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Director Lokesh Kanagaraj revealed about Thalaivar171 movie and Actor Rajinikanth

இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ரமோஷனுக்காக அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்துவரும் லோகேஷ், லியோ குறித்து பேசுவதுடன் தன்னுடைய அடுத்தப்படமான தலைவர்171 படம் குறித்தும் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை பகிர்ந்து வருகிறார்.

தலைவர் 171 கதையை கேட்டு ரஜினி உற்சாகம்: நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் லியோ படத்தில் இணைந்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்தப் படம் சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ள நிலையில் வரும் 19ம் தேதி உலகளவில் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை வெளிப்படுத்தி ரசிகர்களை படக்குழுவினர் உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் படத்தின் இயக்குநர் லோகேஷ் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

லியோ படம் குறித்து பல்வேறு சுவாரஸ்யங்களை லோகேஷ் பகிர்ந்து வருகிறார். இது மட்டுமில்லாமல் லோகேஷ் அடுத்ததாக இயக்கவுள்ள நடிகர் ரஜினிகாந்தின் தலைவர்171 படம் குறித்தும் பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்து வருகிறார். இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை மாநகரம் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே தான் எழுதிவிட்டதாகவும் தன்னுடைய நண்பர் ஒருவரை இந்தப் படத்தில் நடிக்க வைக்க தான் திட்டமிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Director Lokesh Kanagaraj revealed about Thalaivar171 movie and Actor Rajinikanth

இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை தலைவர்171 படத்தின் சூட்டிங்கிற்கு முன்னதாக 5 மாதங்கள் மெருகேற்ற உள்ளதாகவும் இந்தப் படத்திற்கு ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு சூட்டிங் போகும் திட்டமில்லை என்றும் மிகவும் நிதானமாக இந்தப் படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் லோகேஷ் மேலும் கூறியுள்ளார். லியோ படத்தின் சூட்டிங்கிற்கு முன்னதாகவே அதன் ரிலீஸ் தேதியை அறிவித்த நிலையில், தற்போது அதுபோல செய்யப் போவதில்லை என்று லோகேஷ் கூறியுள்ளார்.

தலைவர்171 படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். லியோ படத்தின் ரிலீசை தொடர்ந்து, சிறிது காலம் ஓய்வெடுத்துக் கொண்டு, இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வொர்க்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் லோகேஷ் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்தப் படத்தின் சில பகுதிகளை ஐமேக்ஸ் கேமராவை வைத்து படமாக்கவுள்ளதாகவும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் கதையை கடந்த 2017ம் ஆண்டிலிருந்து தான் மெருகேற்றி வந்துள்ளதாகவும் படத்தின் கதையை 20 நிமிடங்கள் மட்டுமே ரஜினியுடன் விவாதித்ததாகவும் லோகேஷ் கூறியுள்ளார். அதிலேயே மிகவும் இம்ப்ரஸ் ஆன ரஜினிகாந்த் உடனடியாக அந்தக் கதைக்கு ஓகே சொன்னதாகவும் ரஜினியை வைத்து புதிய முயற்சியாக இந்தப் படம் அமையும் என்றும் லோகேஷ் கூறியுள்ளார். இதையடுத்து தன்னிடம் ரஜினிகாந்த் தூள் கிளப்புறோம் கண்ணா என்று உற்சாகமாக பேசியதாகவும் லோகேஷ் தன்னுடைய பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X