Don't Miss!
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விக்ரம் படத்தை ரஜினி 2 முறை பார்த்தார்.. விஜய் பாராட்டு வேற மாதிரி இருந்துச்சு.. லோகேஷ் சொன்ன தகவல்!
சென்னை : நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டவர்களின் சிறப்பான நடிப்பில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வெளியானது விக்ரம்.
இந்தப் படம் உலகளவில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து 450 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது.
இதனிடையே விரைவில் தளபதி 67 படத்தில் இணையவுள்ள லோகேஷ் கனகராஜ் இந்தப் படம் குறித்து மீண்டும் பேசியுள்ளார்.
3
கேர்ள்ஃபிரெண்ட்..
ராயல்
என்ஃபீல்ட்ல
டெலிவரி
பாய்
வேலை..
தனுஷை
பங்கமாக
கலாய்க்கும்
நெட்டிசன்கள்!

விக்ரம் படம்
நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாக சிறப்பான விமர்சனங்களை பெற்றது விக்ரம். இந்தப் படம் சர்வதேச அளவில் 450 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்துள்ளது. கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் இந்தப் படத்தை தயாரித்த நிலையில், இதையடுத்து அவர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளார்.

தாத்தாவாக நடித்த கமல்
நடிகர் கமல்ஹாசன், இந்தப் படத்தில் தாத்தாவாக நடித்துள்ளார். தர்ஷன் என்ற குழந்தைமீது அவர் காட்டும் அக்கறை படத்தில் வேறு லெவலில் காண்பிக்கப்பட்டிருந்தது. தன்னுடைய மகன் காளிதாஸ் இறந்த நிலையில், பேரனை காக்கும் பொறுப்பை அவர் சிறப்பாக நடைமுறைப் படுத்தினார்.

சிறப்பான பாராட்டு
இந்தப் படம் வெளியான போதே அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றது. திரையுலக பிரபலங்கள், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடினர். படம் சர்வதேச அளவிலும் திரையிடப்பட்ட அனைத்து நாடுகளிலும் சிறப்பான விமர்சனங்களை பெற்றன. வெளிநாடு வாழ் தமிழர்கள் இந்தப் படத்தை காண அதிகமான ஆர்வம் காட்டினர்.

பான் இந்தியா படம்
இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக விக்ரம் வெளியான நிலையில், மலையாளத்தில் கூடுதல் வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இதற்கு இந்தப் படத்தில் பகத் ஃபாசிலின் கேரக்டரும் முக்கிய காரணமாக அமைந்தது.

2 மணிநேரத்தில் பாராட்டிய விஜய்
இதனிடையே தளபதி 67 படம் குறித்து தொடர்ந்து பேசிவந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் படம் குறித்து மீண்டும் பேசியுள்ளார். இந்தப் படத்தை இரண்டு முறை நடிகர் விஜய் பார்த்ததாகவும், படம் வெளியான 2 மணிநேரத்தில் தனக்கு கால் செய்த அவர் மைண்ட் ப்ளோயிங் என்று படத்தை பாராட்டியதாகவும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் யூனிவர்சில் இணையும் விஜய்
தொடர்ந்து லோகேஷ் யூனிவர்சில் இணையவும் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதற்கான பணிகளில் தான் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் இதையடுத்து ரஜினிகாந்தும் இந்தப் படத்தை இரண்டு முறை பார்த்துவிட்டு தன்னை பாராட்டியதாகவும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

ரஜினி, அஜித்துடன் இணைய ஆர்வம்
தான் தற்போது தளபதி 67 மற்றும் கைதி 2 படங்களில் மட்டுமே கமிட்டாகியுள்ளதாகவும் ஆனால் ரஜினி மற்றும் அஜித்துடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளதாகவும் லோகேஷ் மேலும் கூறியுள்ளார். தளபதி 67 படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடிக்கவுள்ள நிலையில் அவருக்கு 6 வில்லன்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video

விஜய்க்கு டப் கொடுக்கும் 6 வில்லன்கள்
படத்தில் சஞ்சய் தத், பிரித்விராஜ், அர்ஜுன் மட்டுமில்லாமல் சமந்தா, த்ரிஷா உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், படத்தின் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டவுடன் மேலும் பல தகவல்களை பகிர ஆர்வமாக இருப்பதாக லோகேஷ் தெரிவித்திருந்தார். ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டுவருதால் அவர்களின் அன்புத்தொல்லை காரணமாக தற்போது அவர் சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக நீங்கியுள்ளார்.