எல்லாருக்கும் லோகேஷை பிடிக்கும்.. லோகேஷுக்கு பிடித்த நடிகர் யார்னு தெரியுமா?

சென்னை : நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியானது விக்ரம் படம்.

சர்வதேச அளவில் இந்தப் படம் 200 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி வசூல் சாதனை செய்து வருகிறது.

படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள நிலையில், படத்தின் ஒவ்வொரு காட்சி அமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

விக்ரம் படம்

விக்ரம் படம்

நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 3ம் தேதி சர்வதேச அளவில் வெளியானது விக்ரம் படம். முந்தைய படமான விக்ரம் படத்தையொட்டியே இந்தப் படத்தின் கதை காணப்பட்டது. முன்னதாக அந்தப் படத்திற்கும் இந்தப் படத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறப்பட்டது.

வசூல்சாதனை செய்யும் விக்ரம்

வசூல்சாதனை செய்யும் விக்ரம்

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் இந்தப் படம் வசூல்சாதனை செய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் சர்வதேச அளவில் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. தமிழகத்திலும் 100 டி ரூபாய் வசூலை தாண்டி சாதனை செய்து வருகிறது. விரைவில் பாகுபலி 2 படத்தின் தமிழக வசூலை விக்ரம் படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

சென்னையிலும் கடந்த ஒரே வாரத்தில் 9 கோடி ரூபாய் வசூலை விக்ரம் படம் எட்டியுள்ளது. தொடர்ந்து அரங்கு கொள்ளாத காட்சிகளாக வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த வாரம் நாளை மற்றும் நாளை மறுநாள் வாரயிறுதி நாட்களாக உள்ளதால் மேலும் அதிக வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதியும் இதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பழைய பாடல்கள்

பழைய பாடல்கள்

இந்தப் படத்தின் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. தன்னுடைய படங்களில் பழைய படங்களின் பாடல்களை குறிப்பிட்ட சிறப்பான இடங்களில் இணைப்பதை லோகேஷ் கனகராஜ் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் விக்ரம் படத்தில் அசுரன் படத்தின் சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலையும் இணைத்துள்ளார்.

மன்சூர் அலிகான் ரசிகன்

இந்தப் படத்தின் ஒரிஜினல் பாடலில் மன்சூர் அலிகான் சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தியிருப்பார். இந்நிலையில் இந்தப் பாடல் குறித்து சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தான் மன்சூர் அலிகானின் ரசிகன் என்றும் அவர் கூறியுள்ளார்.

வித்தியாசமான அணுகுமுறை

வித்தியாசமான அணுகுமுறை

அப்படி ஒரு வித்தியாசமான அணுகுமுறையை தான் யாரிடமும் பார்த்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு பேட்டியில் அவரிடம் சீரியசாக ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது அவர் அருகிலிருந்த மரத்திலிருந்து ஒரு இலையை எடுத்து பீப்பி போல ஊதுவதை பார்த்ததாகவும் அதுபோல யாரையும் தான் பார்த்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X