Lokesh kanagaraj: லியோ படத்திலும் சீக்ரெட் கேரக்டர் ஒன்னு இருக்கு.. எதிர்பார்ப்பை தூண்டிய லோகேஷ்!

சென்னை: நடிகர் விஜய் லீட் கேரக்டரில் நடித்துள்ள படம் லியோ. விஜய்யின் 67வது படமான லியோவை இயக்கியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இந்தப் படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி மாஸ் காட்டியுள்ள நிலையில் அடுத்ததாக படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது படத்திற்கான ப்ரமோஷன்களை முடுக்கியுள்ளது லியோ டீம். இதன் ஒரு பகுதியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

லியோ படத்தில் சீக்ரெட் கேரக்டர் உள்ளதாக வெளிப்படுத்திய லோகேஷ் கனகராஜ்: நடிகர் விஜய், த்ரிஷா 14 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ள படம் லியோ. படத்தில் இவர்களுடன் கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், அனுராக் காஷ்யப் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் சென்சார் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்த நிலையில் படம் வரும் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. படத்தின் ட்ரெயிலர், பாடல்கள், வீடியோக்கள், கிளிம்ப்ஸ் போன்றவை அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

Director Lokesh kanagaraj revealed that there is a secret character in the movie

விஜய்யின் கேரியரில் மிகவும் அதிகமான எதிர்பார்ப்புகளுடன் ரிலீசாகவுள்ள லியோ படத்தின் ப்ரீ புக்கிங்குகள் உள்ளிட்டவை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. தமிழகத்தில் இந்தப் படத்தின் ப்ரீ புக்கிங்குகள் வரும் 15ம் தேதி முதல் துவங்கவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்திருந்தார். மேலும் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி துபாயில் நடத்தப்பட உள்ளதாகவும் அதில் ரசிகர்களிடையே வீடியோ மூலம் விஜய் பேசவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மாதம் 30ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள், தற்போது ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடக்கவுள்ள செய்தியை கேட்டு உற்சாகமடைந்துள்ளனர். படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்திற்கான பிரமோஷனை மிகச்சிறப்பான வகையில் படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய தினம் படத்தின் ப்ரமோஷனையொட்டி இயக்குநர் லோகேஷ் படம் குறித்த பல்வேறு விஷயங்களை தொடர்ந்து பகிர்ந்துள்ளார். இந்நிலையில் படம் குறித்த சுவாரஸ்யம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். படம் LCUவில் இணையுமா என்ற கேள்வியுடன், விக்ரம் படத்தில் அமைந்தது போல இந்தப் படத்திலும் ரோலக்ஸ் என்ற சீக்ரெட் கேரக்டர் அமையுமா என்ற கேள்வி தொடர்ந்து ரசிகர்களிடையே இருந்த நிலையில், தற்போது லோகேஷ் அந்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

இதனிடையே இன்றைய தினம் லோகேஷிடம், படத்தின் நடிகர்களை கூகுளில் தேடினால், பல நடிகர்கள் வரிசைக்கட்டி வருவதாகவும் அவர்கள் எல்லாம் படத்தில் இருக்கிறார்களா என்றும் ஆங்கர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், படத்தில் விக்ரம் படத்தில் இருந்ததை போலவே சீக்ரெட் கேரக்டர் ஒன்று உள்ளதாகவும் அதை தற்போது வரை மிகவும் ரகசியமாக வைத்துள்ளதாகவும் படத்தை பார்த்தால் மட்டுமே அந்த கேரக்டர் வெளிப்படும் என்றும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

விக்ரம் படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது. இந்த ஒரு கேரக்டரை மட்டுமே வைத்து அடுத்ததாக படமியக்கும் திட்டம் லோகேஷுக்கு உள்ள நிலையில், தற்போது லியோ படத்தில் அதே போன்றதொரு சீக்ரெட் கேரக்டர் உள்ளதாக லோகேஷ் கூறியுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இவை எல்லாவற்றிற்கும் இன்னும் சில தினங்களில் படத்தின் ரிலீஸ்மூலம் விடை கிடைத்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X