Lokesh: விக்ரம் படத்தை பார்த்துவிட்டு ரோலக்ஸ் கேரக்டர் குறித்து தளபதி சொன்ன விஷயம்.. லோகேஷ் பளீச்!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தை எடுத்து முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படம் வரும் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.
முன்னதாக கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், படத்தை இன்டஸ்ட்ரியல் ஹிட்டாக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் வெற்றி ஏற்படுத்தியுள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பை லியோ படத்தின்மூலம் அவர் மீண்டும் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

ரோலக்ஸ் குறித்த விஜய்யின் கமெண்ட்டை பகிர்ந்த லோகேஷ்: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன், அனுராக் காஷ்யப், சாண்டி மாஸ்டர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் லியோ. இந்தப் படத்தின் சூட்டிங் கடுமையான காஷ்மீரின் குளிரில் 52 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து சென்னை, தலக்கோணம் போன்ற இடங்களிலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள இந்தப் படம் ரிலீசுக்கு முந்தைய வியாபாரத்திலேயே அதிகமாக கல்லா கட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தின் புக்கிங்குகள் சர்வதேச அளவில் பல இடங்களில் துவங்கியுள்ளது. அனைத்து இடங்களிலும் படத்தின் புக்கிங்குகளை மேற்கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். படத்தின் மீதான அதிகமாக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன்களையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டவர்கள் அதிகமான அளவில் மேற்கொண்டு வருகின்றனர். இதனாலும் படத்தின்மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறி வருகிறது.
தொடர்ந்து லியோ படம் குறித்த பல்வேறு விஷயங்களை ஷேர் செய்துவரும் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய முந்தைய படமான கமலின் விக்ரம் மற்றும் அடுத்தப்படமான ரஜினியின் தலைவர்171 உள்ளிட்டவை குறித்தும் ஷேர் செய்து வருகிறார். கமல் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான விக்ரம் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்தது. படம் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய அளவில் கைக்கொடுத்தது.

இந்நிலையில் இந்தப் படத்தை பார்த்த தளபதி விஜய் குறிப்பாக ரோலக்ஸ் கேரக்டரை குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்ததாக லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். படத்தில் சூர்யாவின் கேரக்டர் மற்றும் அவர் அதை வெளிப்படுத்திய விதம் சூப்பர் என்று கூறியதாகவும் லோகேஷ் வெளிப்படுத்தியுள்ளார். அவர் நேரடியாக இப்படி ரோலக்ஸ் கேரக்டரை பாராட்டியது மிகப்பெரிய உத்வேகத்தை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் லியோ குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ், படத்தின் முதல் 10 நிமிட காட்சிகளை கண்டிப்பாக மிஸ் செய்யக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளின் இறுதி 40 நிமிடங்களையும் மிஸ் செய்யக்கூடாது என்று ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இதனிடையே தன்னுடைய அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களான கைதி2, விக்ரம் 2, இரும்புக்கை மாயாவி, ரோலக்ஸ் படங்கள் குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











