Lokesh Kanagaraj: லியோ படத்தில் பிரியா ஆனந்த் கேரக்டர் இதுதான்.. ரகசியத்தை வெளிப்படுத்திய லோகேஷ்!

சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இந்தப் படம் சர்வதேச அளவில் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதற்கான ப்ரமோஷன்கள் தற்போது அதிகளவில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கடந்த இரு தினங்களாக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்த மீடியாக்களில் கொடுத்துவரும் பேட்டிகள் படத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளன.

Director Lokesh kanagaraj revealed the character of Priya Anand in Leo movie

லியோ படத்தில் பிரியா ஆனந்த் கேரக்டரை வெளிப்படுத்திய லோகேஷ்: நடிகர் விஜய்யின் 67வது படமாக உருவாகியுள்ளது லியோ படம். இந்தப் படத்தில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் கூட்டணி அமைத்துள்ளார் விஜய். விஜய் கேங்ஸ்டராக இணைந்துள்ள இந்தப் படத்தில் பார்த்திபன் மற்றும் லியோ என இருவேறு கேரக்டர்களில் நடித்துள்ளார் விஜய். படம் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன்களை படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளார்.

லியோ படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் இரு பாடல்கள், கிளிம்ப்ஸ் வீடியோக்கள், போஸ்டர்கள், ட்ரெயிலர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. அடுத்ததாக படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளதாக தகவ்லகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன்களில் ஒருபகுதியாக கடந்த இரு தினங்களாக தொடர்ந்து அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

லோகேஷின் இந்த பேட்டிகள் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்தப் படம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார் லோகேஷ். மேலும் தன்னுடைய அடுத்த படங்கள், எதிர்கால திட்டங்கள், LCU உள்ளிட்டவற்றையும் அவர் பகிர்ந்துள்ளார். சர்வதேச அளவில் மிகவும் நம்பிக்கைக்குரிய இயக்குநராக போற்றப்படும் லோகேஷின் லியோ படம், விஜய்யை தாண்டி, லோகேஷ் படம் என்ற கவனத்தையும் பெற்றுள்ளது.

Director Lokesh kanagaraj revealed the character of Priya Anand in Leo movie

லியோ படத்தில் நடிகை பிரியா ஆனந்த் இணைந்துள்ளார். இவர் இந்தப் படத்தில் இருந்தாலும் எந்த கேரக்டரில் நடித்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தொடர்ந்து இருந்து வந்தது. ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த பிரியா ஆனந்த், தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ள நிலையில், அவரின் கேரக்டர் குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் படத்தில் பிரியா ஆனந்த், இயக்குநரும் நடிகருமான கௌதம் மேனனின் மனைவியாக நடித்துள்ளதாக லோகேஷ் சீக்ரெட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தில் கௌதம் மேனன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு மனைவியாகத்தான் பிரியா ஆனந்த் நடித்துள்ளதாக தனது சமீபத்திய பேட்டியில் லோகேஷ் கூறியுள்ளார். முன்னதாக விக்ரம் படத்திலேயே பிரியா ஆனந்தை நடிக்க வைக்க தான் திட்டமிட்டதாகவும் ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அது நடக்காமல் போனதாகவும் அதனால் தற்போது லியோ படத்தில் அவர் இணைந்துள்ளதாகவும் லோகேஷ் மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X