விக்ரம் படத்திற்கே போட்டியா?..லோகேஷின் அந்த ட்ரிக்கை கையில் எடுத்த பாலிவுட்..ஒர்க்கவுட் ஆகுமா?
சென்னை : விக்ரம் படத்தின் தாறுமாறான வெற்றியைத் தொடர்ந்து லோகேஷின் அந்த ட்ரிக்கை பாலிவுட் கையில் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மாநகரம் திரைப்படத்தை முதன்முதலாக இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். சில படங்களை மட்டுமே இயக்கினாலும் அவர் கையில் எடுப்பதெல்லாம் பெரிய பெரிய நடிகர்கள் என்பதால் வெகு விரைவில் உச்ச நடிகர் என பெயர் எடுத்துவிட்டார்
கார்த்தி நடிப்பில் வெளியான கைதி பிறகு தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் அதன்பின் தற்போது திரையரங்கில் பின்னிப் பெடல் எடுத்துக்கொண்டிருக்கும் கமலஹாசனின் விக்ரம் என மாஸ் ஹிட்படங்களை கொடுத்துள்ளார்.

விக்ரம்
கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஃகத் பாசில், சூர்யா நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பி வருகிறது. பாகுபலி 2 படத்தின் ஐந்தாண்டு சாதனையை முறியடித்து, தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை விக்ரம் படைத்துள்ளது. விக்ரம் படம் தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தைக் கொடுத்துள்ளது.

ஜூலை 8ந் தேதி ஓடிடியில்
தமிழகத்தில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இப்படத்தின் மொத்த வசூல் தமிழகத்தில் ரூ.200 கோடியை நெருங்கும் நிலையில், உலகம் முழுவதுமான வசூல் ரூ.450 கோடியை நெருங்கிஉள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஜூலை 8ந் தேதி விக்ரம் வெளியாக உள்ளது.

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்
இந்த படத்தில் லோகேஷ், விக்ரம் திரைப்படத்தில் கைதி திரைப்படத்தை புகுத்தி இருந்தார். இது லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் LCU என பெயர் வைத்து ரசிகர்கள் கொண்டாடினர். மேலும், லோகேஷ் கனகராஜின் விஜயை வைத்து இயக்க உள்ள அடுத்தப்படத்திலும் இதே LCU ட்ரிக் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

ஒர்க் அவுட் ஆகுமா?
இந்நிலையில் தமிழ் சினிமாவிற்கு புதிதான வந்துள்ள LCU பாலிவுட்டிற்கும் கொண்டு செல்ல முயற்சிகள் நடித்து வருவதாக கூறப்படுகிறது. சல்மான் கான், ஷாருக் கான், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட நடிகர்கள் திரைப்படங்களில் லோகேஷின் ட்ரிக்கை பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்பது படம் வெளியில் வந்தால்தான் தெரியும்.


Click it and Unblock the Notifications











