அட்லீக்கே அவ்ளோ.. இப்படி ஒரு சூப்பர் படத்த கொடுத்த லோகேஷ்க்கு இவ்வளவுதானா சம்பளம்!

Recommended Video

Thalapathy 64 | Lokesh Kanagaraj Press Meet | Kaithi

சென்னை: கைதி படத்திற்காக லோகேஷ் கனகராஜ் பெற்ற சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸாக இயக்குநர் அட்லீயின் பிகில் படமும், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கைதி படமும் வெளியானது. பிகில் படத்தில் நடிகர் விஜயும் அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்திருந்தனர்.

கைதி படத்தில் நடிகர் கார்த்தி, ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கைதி படத்தில் ஹீரோயினோ அல்லது பாடல்களோ இல்லை.

நல்ல விமர்சனம்

நல்ல விமர்சனம்

ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்த இரு படங்களும் நல்ல வசூலை குவித்தன. ஆனால் பிகில் படத்தை காட்டிலும் கைதி படம் கதை ரீதியாக நல்ல விமர்சனத்தை பெற்றது.

அதிகரிப்பு

அதிகரிப்பு

இதனால் ஆரம்பத்தில் மிகக்குறைவான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட கைதி படம் பின்னர் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்ட இடங்களில் கைதி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தளபதி 64

தளபதி 64

கைதி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்க்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது நடிகர் விஜயை வைத்து தளபதி 64 படத்தை இயக்குகிறார் லோகேஷ். இந்த படத்தின் ஷுட்டிங் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

எவ்வளவு சம்பளம்?

எவ்வளவு சம்பளம்?

இந்நிலையில் பிகில் படத்திற்காக அட்லீ பெற்ற சம்பளம் மற்றும் கைதி படத்திற்காக லோகேஷ் கனகராஜ் பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ பெரிய ஹீரோக்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

யாரு பெஸ்ட்?

யாரு பெஸ்ட்?

ஆனால் புதுமுக இயக்குநரான லோகேஷ் கனகராஜ்க்கு கைதி படம் இரண்டாவது படம்தான். இருபடங்களும் ஒன்றாக ரிலீஸ் ஆனதால் யாருடைய படம் பெஸ்ட் என்ற ரீதியில் இரு படங்களும் பார்க்கப்பட்டன.

லோகேஷ்க்கு சம்பளம்?

லோகேஷ்க்கு சம்பளம்?

இந்நிலையில் பிகில் படத்திற்காக அட்லீக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் கைதி படத்திற்காக லோகேஷ் கனகராஜுக்கு 50 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்ளோதானா?

இவ்ளோதானா?

இதனை அறிந்த நெட்டிசன்கள், அரைத்த மாவையே அரைத்த அட்லீக்கு அவ்வளவு சம்பளம், இப்படி ஒரு சூப்பர் படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவுதானா என கேட்டு சாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X