Lokesh: விஜய் பிறந்தநாளில் காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்பிரைஸ்.. லோகேஷ் பகிர்ந்த தகவல்!

சென்னை: நடிகர் விஜய் -இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகிவரும் இரண்டாவது படம் லியோ. இந்தப் படத்தின் கதையை கடந்த 3 ஆண்டுகளாக தாங்கள் டிஸ்கஸ் செய்து வந்ததாக லோகேஷ் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்திற்காக வாரிசு படத்தின் கடைசி ஷெட்யூலிலிருந்தே நடிகர் விஜய் முடி வளர்த்து வந்ததாகவும், படத்தில் விஜய் லுக்கிற்காக பல போட்டோஷுட்களை முயற்சி செய்துவிட்டே தற்போதைய கெட்டப்பை இறுதி செய்ததாகவும் லோகேஷ் கூறியுள்ளார்.

விஜய் பிறந்தநாளில் லியோ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நா ரெடி வெளியாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Director Lokesh kanagaraj says that big surprise is waiting on Vijays birthday

விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்பிரைஸ்: நடிகர் விஜய் -லோகேஷ் கூட்டணியில் உருவாகிவரும் இரண்டாவது படம் லியோ. முதன்முதலில் இந்தக் கூட்டணி மாஸ்டர் படத்திற்காக இணைந்த நிலையில், அந்தப் படம் 50 சதவிகிதம் மட்டுமே லோகேஷ் கனகராஜ் ஸ்டைலில் அமைந்ததாகவும் தற்போது உருவாகிவரும் லியோ படம் 100 சதவிகிதம் தன்னுடைய ஸ்டைலில் அமையவுள்ளதாகவும் முன்னதாக பேட்டியொன்றில் லோகேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் தனக்கான முழு சுதந்திரத்தை விஜய் கொடுத்ததாக தனது பேட்டியொன்றில் லோகேஷ் கூறியுள்ளார்.

இந்தப் படத்தில் கேங்ஸ்டராக விஜய் நடித்துவரும் சூழலில், வாரிசு படத்தின் கடைசி ஷெட்யூலிலிருந்தே விஜய்யை முடி வளர்க்க தான் கூறியதாகவும், தொடர்ந்து, இந்தப் படத்தில் விஜய்யின் கெட்டப்பிற்காக அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து தற்போதைய லுக்கை இறுதி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய்க்கு சுருள் முடி இருக்கும் நிலையில், டிசைனர் ஒருவரை கொண்டு தற்போதைய லுக்கிற்கான ஹேர்ஸ்டைலை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படத்திலிருந்தே தங்களுக்குள்ளான உறவு மிகவும் சிறப்பாக அமைந்ததாகவும் அந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்தவுடனேயே, தான் அவரை அண்ணா என்று அழைக்கத் துவங்கிவிட்டதாகவும் அது தற்போதுவரை நீடித்து வருவதாகவும் லோகேஷ் குறிப்பிட்டுள்ளார். இன்னும் 10 நாட்களில் லியோ படத்தில் விஜய்யின் போர்ஷன் நிறைவடையவுள்ளதாகவும் இதையடுத்து தான் அவரை மிகவும் மிஸ் செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய்யுடன் எந்தவிதமான ஸ்ட்ரெசும் இல்லாமல் தான் பணியாற்றியதாகவும் செட்டில் மிகவும் அழுத்தமான காட்சிகளை சூட் செய்தாலும் தாங்கள் அனைவரும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் வேலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரும் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்பிரைஸ் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அது ரசிகர்களுக்கு நாள் முழுவதும் உற்சாகத்தை கொடுக்கும் அளவில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக விஜய் பிறந்தநாளையொட்டி லியோ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நா ரெடி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் பெரிய சர்ப்பிரைஸ் ரசிர்களுக்கு காத்திருப்பதாக லோகேஷ் கூறியுள்ளார். இது கண்டிப்பாக விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விஷயமாகவே அமைந்துள்ளது. லியோ படம் LCUவில் இணையுமா என்ற கேள்விக்கு, படம் வெளியாக இன்னும் மூன்றரை மாதங்கள் உள்ள நிலையில் இதுகுறித்து பின்பு ரசிகர்களுக்கு தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X