twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரோலக்ஸ் கேரக்டருக்கு சூர்யாவை தேர்ந்தெடுக்க காரணம் சொன்ன லோகேஷ்!

    |

    சென்னை : நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் விக்ரம்.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகச்சிறப்பான திரைக்கதையுடன் ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட் கொடுத்தது விக்ரம் படம்.

    இந்தப் படத்தை தயாரித்து லீட் கேரக்டரில் நடித்திருந்தார் கமல்ஹாசன். இந்தப் படம் அவருக்கு சிறப்பான வகையில் கைக்கொடுத்தது.

    இந்தியன் 2 படத்திற்கு பிறகு ஹெச் வினோத்துடன் இணையும் கமல்ஹாசன்? இந்தியன் 2 படத்திற்கு பிறகு ஹெச் வினோத்துடன் இணையும் கமல்ஹாசன்?

    விக்ரம் படம்

    விக்ரம் படம்

    நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன், பகத் பாசில், காயத்ரி, மைனா நந்தினி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது விக்ரம். இந்தப் படத்தை இயக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். அவரது மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து இநத்ப் படமும் சிறப்பாக கைக்கொடுத்தது.

    ரோலக்ஸ் கேரக்டர்

    ரோலக்ஸ் கேரக்டர்

    இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவை வித்தியாசமாக கையாண்டிருந்தார் லோகேஷ். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சூர்யாவின் கேரக்டரை மிகவும் சஸ்பென்சாகவே வைத்திருந்தார். படத்தில் 3 நிமிடங்களே வந்தாலும் தன்னுடைய ரோலக்ஸ் கேரக்டரில் மிரட்டியிருந்தார் சூர்யா. சூர்யாவை அந்த கேரக்டரில் பார்த்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

    சிறப்பான கேரக்டர்

    சிறப்பான கேரக்டர்

    அவர் முன்னதாக இயக்கிய மாநகரம், கைதி,மாஸ்டர் படங்கள் சிறப்பான வெற்றியை கொடுத்த போதிலும் விக்ரம் படமே அவருக்கு மிகச்சிறந்த வெளிச்சத்தை லோகேஷிற்கு கொடுத்தது. சர்வதேச அளவில் மிகச்சிறந்த வரவேற்பையும் வசூலையும் இந்தப் படம் பெற்றுக் கொடுத்துள்ளது.

    தளபதி 67 படம்

    தளபதி 67 படம்

    இந்தப் படத்தின் இந்த வெற்றி அவரது அடுத்தப்படமான தளபதி 67 படத்திற்கும் மிகச்சிறந்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே பெற்றுத் தந்துள்ளது. முன்னதாக விஜய் -லோகேஷ் கூட்டணி மாஸ்டர் படத்தில் இணைந்திருந்த நிலையில் தன்னுடைய 50 சதவிகிதத்தையே அந்தப் படத்தில் கொடுத்திருந்ததாகவும் தளபதி 67 படத்தில் 100 சதவிகிதத்தை கொடுக்கவுள்ளதாகவும் லோகேஷ் தெரிவித்திருந்தார்.

    லோகேஷ் விளக்கம்

    லோகேஷ் விளக்கம்

    இந்நிலையில் நேற்றைய தினம் கோவையில் கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். லோலக்ஸ் கேரக்டருக்கு சூர்யாவை தேர்தெடுக்க அவரது தீவிரமான நடிப்பே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Director Lokesh clarfies the character of Surya in Vikram movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X