Lokesh kanagaraj: நான் லியோ பட பணிகளை பார்க்கவில்லை.. லோகேஷ் கனகராஜ் பரபரப்பு பேச்சு!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அடுத்தமாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக விஜய்க்கும் லோகேஷிற்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் லியோ படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

Director Lokesh kanagaraj says that he is not doing work for Leo movie

லியோ படத்தின் வேலைகளை தான் பார்க்கவில்லை என லோகேஷ் வெளிப்படை: நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் போன்ற பகுதிகளில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த மாதம் 19ம் தேதி படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக லியோ வெளியாகவுள்ளது. இதற்கான வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், வரும் 30ம் தேதி படத்தின் இசை வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் முதல் பாடல், விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகி யூடியூபில் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது. பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இந்தப் பாடலை ரீல்ஸ்களாக வெளியிட்டு வருகின்றனர்.

அனிருத் இசையில் லியோ படத்தில் இரண்டு பாடல்களே இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாடல் வெளியாகி சில வாரங்கள் ஆன நிலையில், விரைவில் படத்தின் இரண்டாவது பாடலை வெளியிடவுள்ளதாக ஜவான் படத்தின் பிரமோஷனின் போது அனிருத் தெரிவித்திருந்தார். இன்று மாலை இந்தப் பாடல் வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகியுள்ளது. இதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார்.

பான் இந்தியா படமாக லியோ வெளியாகவுள்ள நிலையில், அடுத்தடுத்து மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் தொடர்ந்து போஸ்டர்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில், காஷ்மீர் பின்னணியில் விஜய் காணப்படுகிறார். இந்த போஸ்டர், அதிகமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தின் ரிலீசுக்கு ஒரு மாதம் முன்னதாக படத்தின் அப்டேட்களை திட்டமிட்டுள்ளதாக நேற்றைய தினம் சைமா விருது விழாவில் இயக்குநர் லோகேஷ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது லியோ படத்தின் போஸ்டரை லோகேஷும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அமைதியாக இருந்து போரை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேப்ஷனில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது லியோ படத்தின் வேலைகளை இயக்குநர் ரத்னகுமார்தான் மேற்கொண்டுள்ளதாகவும் தான் தலைவர் 171 படத்தின் வேலைகளை செய்து வருவதாகவும் நேற்றைய தினம் சைமா விருது விழாவில் பங்கேற்ற லோகேஷ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக லோகேஷ் மற்றும் விஜய்க்கிடையில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் லியோ படத்தின் வேலைகளில் இருந்து லோகேஷ் விலகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பரவின. இந்நிலையில், இந்த தகவல் வதந்திதான் என்று கூறப்ப்டடது. இந்நிலையில், தான் லியோ படத்தின் வேலைகளை மேற்கொள்ளவில்லை என்று லோகேஷ் கூறியுள்ளது ரசிகர்களிடையே மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X