Lokesh Kanagaraj: அன்பறிவ் இயக்கத்திலிருந்து விலகிய லோகேஷ்.. அவரே பகிர்ந்த தகவல்!
சென்னை: விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படம் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தையொட்டி ப்ரமோஷன்களில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் பல பேட்டிகளையும் கொடுத்து வருகிறார்.

லியோ படம் மட்டுமில்லாமல் LCU, தன்னுடைய நடிப்பு, தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்தவகையில் அடுத்ததாக தான் அன்பறிவ் படத்தில் நடிக்கவுள்ளது குறித்தும் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.
அன்பறிவ் இயக்கத்திலிருந்து விலகியதாக லோகேஷ் கனகராஜ் பேட்டி: நடிகர் விஜய், த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படம் வரும் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன்களில் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஒருபுறம் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யங்களை தன்னுடைய பேட்டிகளில் லோகேஷ் வெளிப்படுத்தி வருகிறார்.
லியோ படத்தின் ரிலீசை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தில் இணையவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தின் சூட்டிங் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதாக தற்போது தெரிவித்துள்ளார். முன்னதாக லியோ படத்தை தொடர்ந்து, அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் நடிகராக அனிருத்துடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

படங்களில் அவ்வப்போது தலைகாட்டி வருகின்றனர் அனிருத் மற்றும் லோகேஷ். அந்த வகையில் அவர்களுக்கு நடிப்பில் அதிகமான ஆர்வம் இருப்பதை பார்க்க முடிகிறது. இதையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவிருந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளானது. ஆனால் அன்பறிவ் படத்திலிருந்து விலகிவிட்டதாக தன்னுடைய சமீபத்திய பேட்டியில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தானும் அனிருத்தும் தங்களது படங்களில் மிகவும் பிசியாக இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் லோகேஷ் கூறியுள்ளார்.
லியோ படத்தின் ரிலீசையடுத்து ஒரு வார காலம் ரெஸ்ட் எடுத்துவிட்டு அதன்பின்பு, தலைவர் 171 படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளை துவங்கவுள்ளதாகவும் லோகேஷ் தனது பேட்டியில் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய உதவியாளர் ரத்னகுமாரின் படத்தை தயாரிக்கவுள்ளது குறித்தும் லோகேஷ் உறுதிப்படுத்தியுள்ளார். ராகவா லாரன்ஸ் இந்தப் படத்தில் லீட் கேரக்டரில் நடிக்கவுள்ள நிலையில், படத்தில் கமிட்டாகியிருந்த நயன்தாரா, படத்திலிருந்து சமீபத்தில் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட்டிலும் படம் தயாரிக்கும் திட்டத்தில் லோகேஷ் உள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் மூன்று ஹீரோக்களை முன்னிலையில் வைத்து படம் தயாரிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே தொடர்ந்து 10 படங்கள் மட்டுமே தான் இயக்கவுள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











