Lokesh kanagaraj: என்னோட படங்கள் எனக்கு உற்சாகத்தை கொடுக்க வேண்டும்.. லோகேஷ் பகிர்ந்த விஷயம்!
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருந்த லியோ படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சாதனை படைத்தது. 600 கோடிகளை தாண்டி வசூலித்துள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தலைவர் 171 படத்தில் கமிட்டாகியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் அவர் தற்போது ஈடுபட்டுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தில் துவங்கிய தன்னுடைய வெற்றிப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். கடந்த ஆண்டில் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் லோகேஷ் இயக்கியிருந்த விக்ரம் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது. இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரையரங்குகளில் பான் இந்தியா படமாக வெளியானது லியோ. விஜய், திரிஷா, கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான இந்தப் படமும் சிறப்பான வசூலை பெற்றுள்ளது.

லியோ படம்: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியான லியோ படம், கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படம் 600 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்து இந்த ஆண்டின் சிறப்பான படங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக தலைவர் 171 படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் கமிட்டாகியுள்ளார். இதன் முன் தயாரிப்பு பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
படங்கள் உற்சாகத்தை தர வேண்டும்: தன்னுடைய முந்தைய படமான லியோ படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ள நிலையில், அந்தப்படம் கொடுத்த படிப்பினைகளை தன்னுடைய அடுத்தப்படத்தில் எடுத்துக் கொண்டு, கவனமாக செயல்பட உள்ளதாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தன்னுடைய படங்கள் ஒவ்வொன்றும் தனக்கு ஒரே மாதிரியான உற்சாகத்தை தர வேண்டும் என்றும் அப்படி தரவில்லை என்றால் சினிமாவும் தனக்கு வங்கிப்பணி போன்றதே என்றும் அவர் கூறியுள்ளார்.
தலைவர் 171 பட வேலைகள்: தன்னுடைய அடுத்தப்படமான தலைவர் 171 படத்திற்காக தான் கீழிறங்கி வேலை செய்து வருவதாகவும் முக்கியமாக ரிலீசிங் தேதியை அறிவிக்காமல் படத்தை இயக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தை இயக்க அதிகமான டைம் எடுத்துக் கொண்டு செயல்பட உள்ளதாகவும் லோகேஷ் கூறியுள்ளார். லியோ படத்தின் இரண்டாவது பகுதி சரியில்லை என விமர்சனங்கள் எழுந்தது. இதை தான் கவனத்தில் கொண்டு, தலைவர் 171 படத்தில் மிகவும் கவனமாக செயல்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தயாரிப்பாளரான லோகேஷ் கனகராஜ்: லோகேஷ் கனகராஜ் இயக்குநராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். அவரது தயாரிப்பில் ஃபைட் கிளப் படம் ரிலீசாகவுள்ள நிலையில் அந்தப் படத்தின் பிரமோஷன்களில் தொடர்ந்து லோகேஷ் கனகராஜை பார்க்க முடிந்தது. அந்தப் படத்தையொட்டி கொடுத்த பேட்டியில்தான், லியோ, தலைவர் 171 படங்கள் குறித்து மனம் திறந்து பேசினார். லியோ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு வேலை செய்ததால் தனக்கு அதிகமான பிரஷர் ஏற்பட்டதையும் சுட்டிக் காட்டினார்.


Click it and Unblock the Notifications











