Lokesh kanagaraj: நிறைய நோ சொல்ல கத்துக்கனும்.. லோகேஷ் எதுக்காக இப்படி சொன்னார் தெரியுமா!
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் -விஜய் கூட்டணியில் உருவாகியுள்ளது லியோ படம். வரும் 19ம் தேதி படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்திற்கான ப்ரமோஷன்களை படக்குழுவினர் தற்போது முடுக்கி விட்டுள்ளனர். லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து படத்தின் ப்ரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்று ரசிகர்களிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
நோ சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும் என லோகேஷ் பேட்டி: நடிகர் விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ளது லியோ படம். இன்னும் சில தினங்களில் இந்தப் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. முன்னதாக இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படமும் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது இவர்களது கூட்டணியில் லியோ படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் போன்ற இடங்களில் நடத்தப்பட்ட நிலையில், தற்போது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. படத்தின் முழுமையான வடிவம் வரும் திங்கட்கிழமை உருவாகிவிடும் என்று தனது பேட்டியில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். படத்தின் ப்ரமோஷனையொட்டி படத்தின் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை அவர் தனது பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார். தன்னுடைய எதிர்கால ப்ராஜெக்ட்கள் குறித்தும் பேசி வருகிறார்.
இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த பிப்ரவரியில் ரிலீஸ் தேதியுடன் துவங்கியது. படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ப்ளடி ஸ்வீட் என்ற வார்த்தை, விஜய் ரசிகர்களின் தாரக மந்திரமானது. தொடர்ந்து காஷ்மீரில் கடுமையான குளிருக்கிடையில் படம் 52 நாட்கள் படமாக்கப்பட்டது. இதன் வீடியோக்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள விஜய் -த்ரிஷாவின் புகைப்படங்களும் வெளியாகி மாஸ் காட்டியது.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் ப்ரமோஷன்களை லோகேஷ் கனகராஜ் மிகச்சிறப்பாக செய்து வருகிறார். படம் குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் அவர் தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருகிறார். இந்நிலையில் லோகேஷ் மாற்ற வேண்டிய அவசியமான குவாலிடி என்ன என்று ஆங்கர் கேட்கிறார். இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், நிறைய நோ சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். தனக்காக தான் சிறிது காலத்தை எடுத்துக் கொள்ளவும் விரும்புவதாக தெரிவித்துள்ளர்.
ஒரு படத்திற்கு டெட்லைன் வைத்துக் கொண்டு வேலை செய்வதை தவிர்க்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் கடிவாளம் கட்டியதுபோல தான் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் அதிகமான அழுத்தம் ஏற்படுவதாகவும் இதுபோன்ற அழுத்தங்கள் இல்லாமல் வேலை செய்ய விரும்புவதாகவும் லோகேஷ் தெரிவித்துள்ளார். அடுத்தப்படமான தலைவர் 171 படத்தில் இதுபோல வேலை செய்யவுள்ளதாக முன்னதாக ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











