Lokesh: நான் ஒன்னும் கிரைம் பண்ணலையே.. லியோ படத்துல அது வொர்க்-அவுட் ஆகலை.. லோகேஷ் கனகராஜ் ஓபன்!
சென்னை: மாநகரம் படத்தில் துவங்கிய தன்னுடைய பயணத்தை மிகச்சிறப்பாக மெயின்டெயின் செய்து வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்து கார்த்தி, கமல்ஹாசன், விஜய் என முன்னணி நடிகர்களுடன் பயணம் செய்த அவர் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை ஆட்டி வைத்து வருகிறார்.
கூலி படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் கைதி 2 படத்தில் அவர் கவனம் செலுத்தவுள்ளதாக முன்னதாகவே தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்காக கார்த்தி மட்டுமில்லாமல் ரசிகர்களும் ஆவலுடன் வெயிட்டிங்.

லியோ ஃபிளாஷ்பேக் காட்சிகள்: மிகவும் மாஸான வகையில் இந்த படத்தின் ஃப்ளாஷ் பேக் காட்சிகளை வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். ஆனாலும் பார்த்திபன் அளவிற்கு லியோ கேரக்டர் ரசிகர்களை அதிக அளவில் கவரவில்லை. இந்த படத்தின் பாடல் காட்சிகள் குறித்தும் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அதிக பட்ஜெட்டில் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு செல்லிங் பாயிண்டாக பாடல்கள்கூட இல்லாமல் எப்படி இருக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தான் வேறு ஒரு நம்பிக்கையில் இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளை வைத்ததாகவும் ஆனால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை என்றும் கூறியுள்ள லோகேஷ் கனகராஜ் இது ஒன்றும் பெரிய கிரைம் இல்லையே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மனதில் எடுத்துக் கொள்வேன்: ஆனாலும் இந்த விஷயங்களை தான் மனதில் எடுத்துக் கொண்டு அடுத்தடுத்த படங்களை அணுகுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது ரஜினிகாந்தின் கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். லியோ படத்தில் இருந்தது போன்ற எந்த ஒரு அர்ஜென்ட்டும் இல்லாமல் இந்த படத்தை ரிலாக்ஸாகவே அவர் இயக்கி வருகிறார். சமீபத்தில் உடல்நிலை பிரச்சினை காரணமாக ரஜினிகாந்த் இந்த படத்தின் ஷூட்டிங்கில் சில தினங்கள் பங்கேற்க முடியாமல் போனது. ஆனாலும் அந்த நேரத்தில் மற்ற நடிகர்களின் காட்சிகளை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். தற்போது ரஜினிகாந்த் இந்த படத்தின் ஷூட்டிங்கில் இணைந்து பரபரப்பாக நடித்து வருகிறார்.
கைதி 2 படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி: கூலி படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ரிலீஸாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கூலி படத்தின் ஷூட்டிங்கையடுத்து கார்த்தி நடிப்பில் கைதி 2 படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க்கையும் அவர் நிறைவு செய்துள்ளதாக தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த கதைக்களத்தை கார்த்தியிடம் கூறி ஓகே வாங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படம் ரிலீசாகி தற்போது 6 ஆண்டுகளை கடந்த நிலையில் படத்தில் டில்லியின் மகள் உள்ளிட்ட அனைவரும் வளர்ந்த நிலையில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக லோகேஷ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











