Director Lokesh kanagaraj: கணிப்புகளை தாண்டி தலைவர் 171 படம் இருக்கும்.. லோகேஷ் கனகராஜ் உறுதி!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் இணையவுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் வரும் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாக லோகேஷ் கனரகாஜ் தெளிவுப்படுத்தியுள்ளார். இதனிடையே இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் கருப்பு வெள்ளையில் ரஜினிகாந்த் காணப்படுகிறார். அவரது கைகளில் வாட்ச்களால் கைவிலங்கிடப்பட்டுள்ளது.

இந்த லுக் அதிகமான யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. படம் டைம் டிராவல் கதைக்களத்தில் உருவாகிறதா என்பது போன்ற பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. படத்தில் இணையவுள்ள மற்ற நடிகர்கள் நடிகைகள் குறித்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. படம் கண்டிப்பாக பான் இந்தியா படமாக உருவாகும் என்ற நிலையில், ஜெயிலர் படத்தை போலவே மற்ற மொழிகளில் முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் இணைவார்கள் என்றும் எதிர்பார்க்கலாம். படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை கடந்த ஆண்டின் இறுதியிலேயே துவங்கினார் லோகேஷ் கனகராஜ். இந்த வேலைகளுக்காக 5 -6 மாதங்களை அவர் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Director Lokesh kanagaraj speaks about Rajinikanth s Thalaivar 171 movie s script


நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அவர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் இணைய உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தில் துவங்க உள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில் தற்போது படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்க உள்ளதாக தனது பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தலைவர் 171 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளுக்காக 5 -6 மாதங்கள் எடுத்துக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்: இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் வில்லன் ஷேடில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையொட்டி கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த போஸ்டரில் அதிரடியாக ரஜினிகாந்த் கருப்பு வெள்ளையில் காணப்படும் நிலையில் அவரது கைகளில் வாட்ச்களால் விலங்கிடப்பட்டுள்ளதாக காணப்படுகிறது. இதையொட்டி படம் டைம் டிராவல் கதைக்களத்தில் பயணிக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

பிரம்மாண்ட தயாரிப்பு: தன்னுடைய முந்தைய படங்கள் போல இல்லாமல் இந்த படத்தில் போதை சமாச்சாரங்கள் இல்லாமல் எடுக்க உள்ளதாக முன்னதாக தனது பேட்டியில் லோகேஷ் கனகராஜ் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் ரஜினியை இதுவரை இல்லாத வகையில் தான் திரையில் கொண்டு வர உள்ளதாகவும் அதிரடி ஆக்ஷன் படமாக தலைவர் 171 படம் உருவாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்த படத்தின் கதைக்களம் தங்க கடத்தலை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தங்கக்கடத்தல் கதைக்களம்?: சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தங்கம் எப்படி இந்தியாவிற்குள் கடத்தப்படுகிறது மற்றும் இந்த கடத்தலில் ரஜினிகாந்த் எப்படி செயல்படுகிறார் என்பதை குறிப்பிடும் படமாக அமைய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அதிகமான வாட்சுகள் காணப்படுவதால் இந்த படம் டைம் டிராவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதா என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த லோகேஷ், எல்லோரும் ஏதாவது ஒன்றை யூகிப்பார்கள் என்றும் ஆனால் தான் வேறு விதமாக ஸ்கிரிப்ட்டை உருவாக்கி வருவதாகவும் காத்திருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X