கமல் பரிசளித்த LexusRX கார்.. டைரக்டர் லோகேஷ் கனகராஜ் அந்தக் கார்ல வந்து என்ன செஞ்சாரு தெரியுமா?
சென்னை : நடிகர் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து சமீபத்தில் விக்ரம் என்ற மிரட்டலான படத்தை கொடுத்திருந்தனர்.
இந்தப் படம் 100 நாட்களை கடந்து தற்போது திரையரங்குகளில் ஓடி வருகிறது. மேலும் நெட்பிளிக்ஸ், ஜீ5 என இரண்டு ஓடிடி தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் சக்சசையொட்டி நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் லோகேஷை பாராட்டி விலையுயர்ந்த காரை பரிசளித்திருந்தார்.

விக்ரம் படம்
நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், சூர்யா என மிரட்டலான காம்பினேஷனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசானது விக்ரம் படம். இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் 100 நாட்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்து தொடர்ந்து ஓடி வருகிறது.

தாறுமாறான வசூல்
இந்தப் படம் 420 கோடி ரூபாய்களை வசூல் செய்துள்ளது. இது மட்டுமில்லாமல் சாட்டிலைட், ஓடிடி ரைட்ஸ்களும் இந்தப் படத்தின் வசூலை எகிற செய்துள்ளன. படம் நெட்பிளிக்ஸ் மற்றும் ஜி5 ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன. 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் நடிப்பில் வெளியான இந்தப் படம் அவருக்கு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் சிறப்பாக கைக்கொடுத்தன.

கமலின் ரசிகர்
கைதி, மாநகரம், மாஸ்டர் படங்களை தொடர்ந்து விக்ரம் படத்தை இயக்கியிருந்தார் லோகேஷ். தன்னை கமல்ஹாசனின் மிகச்சிறந்த ரசிகன் என்றும் அவரது படங்களை பார்த்தே தான் திரைத்துறையில் நுழைந்ததாகவும் முன்னதாக ஒரு பேட்டியில் லோகேஷ் குறிப்பிட்டிருந்தார்.

சுதந்திரமான இயக்கம்
இந்நிலையில் கமலின் தலையீடு இல்லாமல் தான் விக்ரம் படத்தை 100 சதவிகிதம் தன்னுடைய படமாகவே இயக்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் படம் தற்போது சூப்பர் ஹிட்டடித்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து விரைவில் விஜய்யின் தளபதி 67 படத்திலும் இணையவுள்ளார்.

காஸ்ட்லி காரை பரிசளித்த கமல்
விக்ரம் படம் சிறப்பான கலெக்ஷனை கொடுத்த நிலையில், இயக்குநர் லோகேஷிற்கு கமல்ஹாசன் LexusRX காரை பரிசளித்தார். உதவி இயக்குநர்களுக்கு காஸ்ட்லியான பைக்குகளை பரிசளித்திருந்தார். இந்நிலையில் இந்த விலையுயர்ந்த காருடன் தற்போது ஒரு நிகழ்ச்சியில் லோகேஷ் கலந்துக் கொண்டுள்ளார்.

டீக்கடை திறப்பு நிகழ்ச்சியில் லோகேஷ்
சென்னை வளசரவாக்கத்தில் ஒரு டீக்கடை திறப்பு நிகழ்ச்சியில்தான் லோகேஷ் இந்தக் காருடன் பங்கேற்றுள்ளார். இதையடுத்து அவரையும் அவரது இந்த காஸ்ட்லி காரையும் வீடியோவில் பதிவு செய்து வைரலாக்கியுள்ளனர் ரசிகர்கள். இந்த வீடியோ தற்போது அதிகமாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

விஜய்யுடன் இணையும் லோகேஷ்
மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் -விஜய் இணையும் தளபதி 67 படத்தின் அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் உள்ளது. தற்போது விஜய் வாரிசு படத்தில் நடித்து வந்தாலும், லோகேஷின் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள தளபதி 67 படத்தின் அறிவிப்பைதான் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











