லோகி மாமா.. லோகேஷ் கனகராஜையே வெட்கப்பட வைத்த க்யூட் குழந்தை.. வைரலாகும் வீடியோ!

சென்னை: கூலி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். நேற்று கோயம்பத்தூரில் உள்ள திரையரங்கு ஒன்றில் கூலி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் திரும்பிச் செல்லும் போது குழந்தை ஒன்று அவரை பார்த்து லோகி மாமா என க்யூட்டாக கூப்பிட அவரே ஒரு நிமிடம் ஷாக் ஆகி அந்த குழந்தையிடம் சென்று கொஞ்சிய வீடியோ வைரலாகி வருகிறது.

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுமகான லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தியை வைத்து எடுத்த கைதி படத்தின் மூலம் தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்த தளபதி விஜய்க்கு இவரது இயக்கம் பிடித்துப் போய் விட்டது.

Director Lokesh Kanagaraj stunned by a cute child called him as Loki Mama video goes viral

அட்லீ இயக்கிய பிகில் படத்தையே பிகில் ஊத வைத்து விட்டானே யாருடா இவன் என அழைத்து மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.

தமிழ் சினிமாவின் டாப் டைரக்டர்: தமிழ் சினிமாவின் டாப் இயக்குநராக தற்போது லோகேஷ் கனகராஜ் மாஸ் காட்டி வருகிறார். கூலி படத்தை இயக்க அவருக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதை அவரே கூறியுள்ளார். பல முன்னணி நடிகர்களுக்கே இன்னமும் தமிழ் சினிமாவில் 50 கோடி சம்பள்ம் என்பது எட்டா கனியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கூலிக்கு அடுத்து அவர் இயக்கும் படத்துக்கு 60 கோடியாக சம்பளம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகி மாமா லவ் யூ: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், செளபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே மற்றும் அமீர்கான் என நட்சத்திர பட்டாளத்தையே வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், அந்த படத்தை ப்ரோமோட் செய்யும் விதமாக கோபிநாத்திடம் 2.15 மணி நேரம் பேட்டியளித்திருந்தார். கோவையில் திரையரங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட லோகேஷ் கனகராஜ் எல்சியூ பற்றியும் பேசிவிட்டு, திரும்பிச் செல்லும் போது அவரை லோகி மாமா என ஒரு குழந்தை க்யூட்டாக அழைத்து லவ் யூ சொன்ன வீடியோ வைரலாகி வருகிறது.

ஷாக் ஆன லோகி: வெட்டுக் குத்து, பெரிய பெரிய கொசு மருந்து துப்பாக்கி என படம் முழுவதும் வயலென்ஸாக எடுத்துத் தள்ளும் நம்மை ஒரு குழந்தை லோகி மாமான்னு கூப்பிடுதேன்னு ஷாக்கான லோகேஷ் கனகராஜ் எங்கே இருந்து அந்த குரல் வருதுன்னு பார்த்து, அந்த குழந்தைக்கு அருகே சென்று அதை கொஞ்சிவிட்டு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. அடுத்து லோகேஷ் கனகராஜ் ஹீரோவாகவும் நடிக்கவுள்ள நிலையில், இப்போதே குழந்தைகளையும் ரசிகர்களாக மாற்றி வருகிறார்.

விஜய் இல்லாமல் எல்சியூ முழுமை பெறாது: எல்சியூ குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், எல்சியூ முழுமை பெற வேண்டும் என்றால் லியோ வரவேண்டும். ஆனால், விஜய் அண்ணா வேறு ஒரு விஷயத்தில் தீவிரமாக உள்ளார். எப்படி இருந்தாலும், அவர் வரவில்லை என்றால் எல்சியூ எப்போதுமே முழுமை பெறாது என்றும் சொல்லி விஜய் ரசிகர்களையும் குஷிப்படுத்தியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கூலி படத்தின் வெற்றிக்கு விஜய் ரசிகர்கள் வேண்டும் என்பதற்காகவே அவர் இப்படி பேசி வருகிறார் என்றும் சோஷியல் மீடியாவில் சண்டை ஓடிக் கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X