Don't Miss!
- Sports மச்சக்காரன்யா நீ.. ஒரு போட்டிக்கு 3 கோடி சம்பளம்! ஒரு விக்கெட்டுக்கு 2.4 கோடி.. தீபக் சாஹரின் யோகம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மீண்டும் வருகிறேன்..சமூகவலைத்தளங்களிலிருந்து விலகிய லோகேஷ் கனகராஜ்..இது தான் காரணமா?
சென்னை : லோகேஷ் கனகராஜ் அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் தான் சிறிது இடைவேளை எடுத்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.
இவர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
பிரம்மாண்ட படங்களில் கைக்கோர்க்கும் சிம்பு.. சூப்பரான லைன் அப்பா இருக்கே!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
2017ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் மூலம் தனக்கான பாதையை உருவாக்கி கமலுடன் பணிபுரிய வாய்ப்பை பெற்றார்.
விக்ரம்
கமல்ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை இயக்கி இந்திய அளிவில் லோகேஷ் கனகராஜ் பேசப்பட்டார். விக்ரம் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.440 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது. விக்ரம் திரைப்படம் மகத்தான வெற்றி பெற்றதால், கமல் லோகேஷ் கனகராஜூக்கு லக்சஸ் கார் ஒன்றை பரிசாக அளித்திருந்தார்
தளபதி 67
லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இவர் அடுத்ததாக விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளது. விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு படப்பிடிப்பு முடிந்தவுடன் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறிது.
சிறிது இடைவேளை
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் தான் சிறிது இடைவேளை எடுத்துக்கொள்ள உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அடுத்த படத்தின் அறிவிப்போடு உங்களை வந்து மீண்டும் சந்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார். அனைத்து சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.