விஜய்யின் வேற டைமன்சனை காட்டுற மாதிரி மாஸ்டர் இருக்கும்... லோகேஷ் கனகராஜ்
சென்னை: கைதி படத்தின் ஷூட்டிங்கின் போது மாஸ்டர் பட வாய்ப்பு வந்தது என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.
Recommended Video
விஜய் நடிக்கும் படம் மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார்.

இயக்குனர்கள் விக்னேஷ் சிவன், அருண்ராஜா காமராஜ், உதவி இயக்குனர் விஷ்ணு, பாடல்கள் எழுதியுள்ளனர். சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதன் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 'கைதி ஷூட்டிங்கின் போது இந்த வாய்ப்பு வந்தது. கைதி முடிவதற்குள் ஓகே ஆகிவிட்டது. படத்துக்கு 'வாத்தி' என்றுதான் டைட்டில் வைத்திருப்பதாக நண்பர்களிடம் சொல்லி இருந்தேன். பிறகுதான் மாஸ்டர் என்ற உண்மையை வெளிப்படுத்தினேன்.
இதுவரை விஜய் சார் என்ன பண்ணியிருக்காரோ, பண்ணுவாரோ, அதை 'மாஸ்டர்' படத்துல பண்ணல. விஜய் சாரோட வேற டைமன்சனை காட்டற மாதிரி இந்தப் படம் இருக்கும். இந்தப் படத்தோட கதை சொல்லும் முறை, புதுமையாக இருக்கும். முன்னாடி என் படத்துல ஒரே ஒரு டிரெஸ்தான் என் கேரக்டர்ஸுக்கு இருக்கும். இதுல 200 டிரெஸ் இருக்கும். அதே மாதிரிதான் எல்லாமே' என்றார்.


Click it and Unblock the Notifications











