LEO ஸ்பாட்டில் கர்ஜிக்கும் சிங்கம்... மை டியர் மிஷ்கின் சார்... லோகேஷின் க்யூட் ரியாக்ஷன்
காஷ்மீர்: விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
காஷ்மீரில் நடைபெற்று வரும் இந்தப் படப்பில் பங்கேற்ற இயக்குநர் மிஷ்கின், இருதினங்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார்.
அதனையடுத்து அவர் லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜை பாராட்டி ட்வீட் போட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது மிஷ்கினுக்கு க்யூட்டாக நன்றி கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

சென்னை திரும்பிய மிஷ்கின்
விஜய்யின் லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. முன்னதாக சென்னையில் பூஜையுடன் தொடங்கிய லியோ ஷூட்டிங்கில் இயக்குநர் மிஷ்கினும் கலந்துகொண்டார். லியோ அப்டேட் அபிஸியலாக வரும் முன்பே அந்தப் படத்தில் நடிப்பது குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார் மிஷ்கின். இந்நிலையில், கடந்த வாரம் காஷ்மீரில் நடைபெற்ற படப்பிடிப்பிலும் மிஷ்கின் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பினார்.

லோகேஷுக்கு பாராட்டு
காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பியதும் லியோ படத்தில் நடித்தது குறித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், "லியோ படத்தில் என்னுடைய பகுதிகளை முடித்து சென்னை திரும்புகிறேன். அந்த குளிரிலும் எல்லாரும் தீவிரமாக வேலை பார்த்தனர். அதுமட்டுமின்றி அவர்கள் என்னை பக்குவமாக பார்த்துக் கொண்டனர். அவர்கள் என்னிடம் நடந்துகொண்ட விதம் என்னை வியக்க வைத்தது. ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு என்னை வைத்து சூப்பர் சண்டைக் காட்சிகளை எடுத்துள்ளார்."

கர்ஜிக்கும் சிங்கம் லோகேஷ்
மேலும், "எனது தம்பி விஜய்யுடன் பணியாற்றியதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். அவர் என்னிடம் காட்டிய அன்பையும் அக்கறையும் ஒருபோதும் மறக்கமாட்டேன். அதேபோல் படப்பிடிப்பில் கர்ஜிக்கும் சிங்கமாய் லோகேஷ் கனகராஜ் செயல்பட்டார். ஒரு நல்ல இயக்குநராக செயல்பட்ட அவரை கட்டி தழுவி கன்னத்தில் முத்தமிட்டேன். இப்படம் மாபெரும் வெற்றியை தொடவேண்டும்" என அதில் குறிப்பிட்டிருந்தார். மிஷ்கினின் இந்த அறிக்கை கடந்த இரு தினங்களாக வைரலாகி வந்தது.

மை டியர் மிஷ்கின் சார்
இதனையடுத்து மிஷ்கினுக்கு நன்றி கூறி ட்வீட் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அதில், "மை டியர் மிஷ்கின் சார்.. உங்களுடன் இவ்வளவு நெருங்கிய நிலையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இதை வெளிப்படுத்த ஒரு மில்லியன் நன்றிகள் சொன்னாலும் போதாது. நான் உங்களுக்கு ஒருபோதும் போதுமான அளவு நன்றி சொல்ல முடியாது இருந்தாலும் மில்லியன் நன்றிகள். நீங்கள் செட்டில் இருக்கும் போது அதனை நன்கு உணர்ந்தோம்" என பதிவிட்டுள்ளார். மேலும் படப்பிடிப்பின் போது மிஷ்கினுடன் எடுத்துக்கொண்ட போட்டோவையும் தனது டிவிட்டர் பதிவில் ஷேர் செய்துள்ளார். லோகேஷின் இந்த டிவிட்டர் பதிவு ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











