வர வேண்டிய நேரத்துல வெயிட்டா வரும்.. சம்மர் சம்ஹாரம் நிச்சயம்..

சென்னை: மாஸ்டர் படம் இன்று ரிலீஸ் ஆகாத நிலையில், சோகத்துடன் இருக்கும் ரசிகர்களுக்கு நம்பிக்கை ட்வீட் போட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

Recommended Video

Master மோதல் | Thalapapthy Vijay | Lokesh Kanagaraj | Lock Down

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. புதுப்படங்களின் ரிலீஸ் உலகம் முழுவதும் தள்ளிப் போடப்பட்டிருக்கும் சூழ்நிலையில், இன்று வெளியாகவிருந்த மாஸ்டர் பட ரிலீசுக்கும் கொரோனா வேட்டு வைத்து விட்டது.

மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாத நிலையிலும், விஜய் ரசிகர்கள் #MasterFDFS என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர்.

வர வேண்டிய நேரத்துல

ரசிகர்களின் அன்பை பார்த்த மாஸ்டர் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளது. லாக் டவுன் மாஸ்டர் படத்திற்கு நாக் டவுன் இல்லை விரைவில் ரிலீஸ் ஆகும் என அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஷேர் செய்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், வர வேண்டிய நேரத்துல மாஸ்டர் கண்டிப்பா வரும், இப்போ கொண்டாட்டத்தை விட பாதுகாப்பு தான் முக்கியம் என்றும் பதிவிட்டுள்ளார்.

சம்மர் சம்ஹாரம்

சம்மர் சம்ஹாரம்

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் எப்போது குறையும் என்பதே தெரியாத நிலையில், ஆடை படத்தின் இயக்குநர் ரத்னகுமார், தனது ட்விட்டர் பக்கத்தில், அந்த போஸ்டரை ஷேர் செய்து, சம்மர் சம்ஹாரம் கன்ஃபார்ம் என நிச்சயம் மாஸ்டர் படம் அடுத்த மாதம் ரிலீசாகும் என்ற சிக்னலை நம்பிக்கையுடன் கொடுத்துள்ளார்.

வெறித்தனமான சாதனை படைக்கும்

மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிவிட்ட இந்த ட்வீட்டுக்கு, தளபதி ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். நன்றி தலைவா, படம் எப்போ வேணா வரட்டும், வந்தா வெறித்தனமான சாதனையை படைக்கும், நீங்க சேஃபா இருங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

டிரைலராவது

விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் புதுவிதமாக உருவாகி உள்ள மாஸ்டர் படம் எப்போ வேணா ரிலீஸ் ஆகட்டும், அதன் ரிலீசுக்காக வெயிட் பண்ணுவோம் என்று பதிவிட்டு வரும் ரசிகர்கள், அப்படியே அந்த டிரைலர் அப்டேட் ஆவது சொல்லிட்டு போங்க என்றும், குறைந்தபட்சம் மாஸ்டர் படத்தின் டிரைலராவது வெளியிடலாமே அண்ணா என்றும் அன்பு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X