Lokesh kanagaraj: கேரளாவில் லோகேஷ் கனகராஜ்.. பேட்டி கூட கொடுக்காம திரும்பி வந்ததன் காரணம்!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 475 கோடி ரூபாய்களை கடந்த 5 நாட்களில் குவித்துள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தின் வேலைகளில் பிசியாக உள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தில் மேலும் கௌதம் மேனன், அனுராக் காஷ்யப், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்களும் நடித்திருந்தனர். இத்தகைய மாஸ் நட்சத்திரங்களை வைத்து லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ். கடந்த பிப்ரவரியில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில், முன்னதாகவே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.
லோகேஷின் மனஅழுத்தம்: இதனால் மிகுந்த அழுத்தத்துடன் படத்தின் ரிலீசையொட்டி கடிவாளம் கட்டியது போல தான் பணியாற்றியதாக முன்னதாக பேட்டியொன்றில் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். இந்நிலையில் தான் அறிவித்தபடி கடந்த 19ம் தேதி படத்தை சர்வதேச அளவில் சிறப்பாக ரிலீஸ் செய்துள்ளார். படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். அடுத்தடுத்த வாரயிறுதி மற்றும் பூஜை விடுமுறை கொண்டாட்டங்களை அடுத்து படத்தை ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளில் சென்று கண்டுகளித்து வருகின்றனர்.

அனைத்து மொழிகளிலும் சிறப்பு: இதனால் லியோ படத்தின் வசூல் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் கடந்த 5 நாட்களில் 475 கோடி ரூபாய்களை கடந்துள்ளது. இன்றைய தினம் விஜயதசமி விடுமுறையையொட்டி படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் படம் 500 கோடி வசூலை தாண்டி 500 கோடி கிளப்பில் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படம் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் சிறப்பான வசூலை ஈட்டி வருகிறது.
பாலக்காட்டில் லோகேஷ்: இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கேரளாவின் பாலக்காட்டில் உள்ள பிரபல திரையரங்கில் சென்று ரசிகர்களை சந்தித்துள்ளார். இதன்போது அவரை காண ஏராளமான ரசிகர்கள் திரையரங்க வளாகத்தில் குவிந்தனர். இதனால் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் லோகேஷுக்கு லேசான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். கேரளாவில் விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் உள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் லோகேஷ் கனகராஜிற்கு இந்த அளவிற்கு ரசிகர்கள் உள்ளது இதன்மூலம் தெரியவந்துள்ளது.
மற்ற விசிட்கள் கேன்சல்: இந்த விசிட்டை தொடர்ந்து மேலும் 2 திரையரங்குகளுக்கு செல்லவும் செய்தியாளர்களை சந்திக்கவும் லோகேஷ் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த முதல் விசிட்டிலேயே ரசிகர்களிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக அவருக்கு காயம் ஏற்பட்டதால் தன்னுடைய மற்ற திட்டங்களை கேன்சல் செய்துவிட்டு சென்னை திரும்பவுள்ளார் லோகேஷ் கனகராஜ். விரைவில் கேரளாவிற்கு மீண்டும் வருவேன் என்றும் அதுவரை இதே லவ்வுடன் லியோ படத்தை பார்க்கும்படியும் கேரள ரசிகர்களை லோகேஷ் ட்விட்டர் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











