முதல்ல சிதம்பரம்.. இப்போ திருப்பதி.. என்ன ஒரே ஆன்மீக பயணமா இருக்கு.. லோகேஷிடம் ரசிகர்கள் கேள்வி!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விக்ரம் படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

முன்னதாக அவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களும் அவருக்கு சிறப்பாக அமைந்தன.

அடுத்ததாக விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதற்கான முன்தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

கமலின் விக்ரம் படம்

கமலின் விக்ரம் படம்

நடிகர் கமல்ஹாசன் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடித்து வெளியாகியுள்ளது விக்ரம் படம். கடந்த 3ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசான நிலையில், படம் சூப்பர் ஹிட்டடித்துள்ளது. கடந்த 8 நாட்களில் சர்வதேச அளவில் படத்தின் வசூல் 260 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளது.

லோகேஷின் 4வது படம்

லோகேஷின் 4வது படம்

லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இது அவரது நான்காவது படம். பேங்கில் பணிபுரிந்துவந்த லோகேஷ் எந்தவிதமான முன் அனுபவமும் இல்லாமல் மாநகரம், கைதி, மாஸ்டர் தற்போது விக்ரம் என மாஸ் படங்களை கொடுத்துள்ளார். இந்தப் படம் அவரை சர்வதேச அளவில் அனைவருக்கும் தெரிந்த இயக்குநராக மாற்றியுள்ளது.

தளபதி 67 படத்தில் லோகேஷ்

தளபதி 67 படத்தில் லோகேஷ்

முன்னதாக விஜய்யை தனது மூன்றாவது படத்திலேயே இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக மீண்டும் இயக்கவுள்ளார். தளபதி 67 படத்தில் அவர் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், விஜய் பிறந்தநாளில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

தளபதி 67 படத்திற்கு எதிர்பார்ப்பு

தளபதி 67 படத்திற்கு எதிர்பார்ப்பு

தற்போது விஜய் வம்சியின் இயக்கத்தில் நடித்துவரும் நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் இணையும் தளபதி 67 படத்திற்கே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. தொடர்ந்து இந்தப் படத்தை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

ராமேஸ்வரம் பயணம்

ராமேஸ்வரம் பயணம்

விக்ரம் படம் வெளியான பின்பு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது அசிஸ்டெண்ட்கள் இணைந்து ராமேஸ்வரம் சென்று ராமநாத ஸ்வாமியை தரிசனம் செய்தனர். இதன் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை அவர் சென்டிமெண்ட்டாக ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின்போதும் செய்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

திருப்பதியில் சாமி தரிசனம்

திருப்பதியில் சாமி தரிசனம்

இந்நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது டீம் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் விஜய்யின் தளபதி 67 படத்தில் இணையவுள்ள லோகேஷ் அப்போது சூட்டிங்கில் பிசியாகிவிடுவார் என்பதால் தொடர்ந்து அடுத்தடுத்து தான் போக நினைக்கும் இடங்களுக்கு சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X