Lokesh Kanagaraj: ஷாருக்கானுடன் இணைந்து பார்க்க விரும்பும் படம்.. லோகேஷ் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?

சென்னை: நடிகர் ஷாருக்கானின் ஜவான் படம் ரசிகர்களின் மற்றும் சக நடிகர்களின் இதயங்களை கொள்ளையடித்துள்ளது.

இந்தப் படம் வெளியான இடங்களில் எல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓடி வருகிறது.

படத்திற்கு சிறப்பான விமர்சனங்கள் கிடைத்துவரும் சூழலில் படத்தின் வசூலும் 1000 கோடி ரூபாய்களை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Director Lokesh kanagaraj wants to join with Shah rukh khan and watch his Leo movie

ஷாருக்கானுடன் இணைந்து படம் பார்க்க விரும்பும் லோகேஷ்: நடிகர் ஷாருக்கானின் ஜவான் படத்தின் ரிலீஸ் இன்றை தினம் சர்வதேச அளவில் மிகவும் சிறப்பாக நிகழ்ந்துள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. சிறப்பான விமர்சனங்களை படம் பெற்றுள்ள நிலையில், முன்னதாகவே படத்தின் புக்கிங், உரிமைகள் என அதிகப்படியான வசூலை படம் ஈட்டியுள்ளது. படத்தின் புக்கிங்கில் மட்டுமே 50 கோடி ரூபாய்களை படம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்தப் படத்தின் வசூல் மற்றும் வரவேற்பு நடிகர் ஷாருக்கானை உற்சாகம் கொள்ள செய்துள்ளது. தொடர்ந்து அவரும் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே பல பிரமோஷன்களை இந்திய அளவில் மேற்கொண்டிருந்தார். படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றபோது, அனிருத், ப்ரியா மணி உள்ளிட்டவர்களுடன் சிறப்பான நடனத்தை மேற்கொண்ட ஷாருக்கான், னால் தளபதி விஜய் போல சிறப்பான தன்னால் நடனம் ஆட முடியாது என்று கூறி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்நிலையில் இந்தப் படத்திற்கு சக நடிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்களிடம் இருந்து தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் வெற்றிக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும், ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார் லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்த வாழ்த்துக்களுக்கு ஷாருக்கான் நன்றியை தெரிவித்ததையும் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் படத்தினை தமிழில் பார்த்துவிட்டு படம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கமெண்ட் தெரிவிக்கும்படி ஷாருக்கான் அவரை கேட்டுக் கொண்டார். மேலும் லியோ படத்தின் வெற்றிக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். தற்போது இதற்கு பதிலளித்துள்ள லோகேஷ் கனகராஜ், விரைவில் ஜவான் படத்தை பார்க்கும் திட்டத்தில்தான் தானும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் லியோ படம் வெளியானவுடன் அந்தப் படத்தை ஷாருக்கானுடன் இணைந்து பார்க்க தான் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது லியோ படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் ரிலீஸ் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் சிறப்பான ரிலீஸ்களில் ஜெயிலர் மற்றும் ஜவான் படங்கள் மாஸ் காட்டியுள்ளன. இந்த வரிசையில் அடுத்ததாக விஜய்யின் லியோ படமும் உள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் ரிலீசாகவுள்ள லியோ படம் எத்தகைய தாக்கத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X