Lokesh kanagaraj: கார்த்தியையும் சூர்யாவையும் வச்சு படமியக்க திட்டமிட்ட லோகேஷ்.. எந்தப்படம் தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தின் ப்ரமோஷன்களையொட்டி அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

சர்வதேச அளவில் லியோ படத்தின் புக்கிங்குகள் துவங்கியுள்ள நிலையில், ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் புக்கிங்குகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகர்கள் கார்த்தி -சூர்யாவை வைத்து படமியக்க திட்டமிட்ட லோகேஷ்: நடிகர் விஜய்யின் லியோ படத்தை எடுத்து முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். சர்வதேச அளவில் இந்தப் படத்திற்கான வரவேற்பு ஏகத்திற்கும் எகிறியுள்ளது. ஒருபுறம் படக்குழுவினரும் தங்களது பங்கிற்கு ப்ரமோஷன்களை முடுக்கி விட்டுள்ளனர். இந்தப் படத்தின் புக்கிங்குகள் சர்வதேச அளவில் துவங்கியுள்ள நிலையில், ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் டிக்கெட் புக்கிங் செய்து வருகின்றனர். சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பை லியோ படம் பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் முதல் 10 நிமிடங்களையும் க்ளைமாக்சின் இறுதி 40 நிமிடங்களையும் மிஸ் செய்துவிட வேண்டாம் என லோகேஷ் கனகராஜ் தனது சமீபத்திய பேட்டியில் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேட்டியும் படத்திற்கான எதிர்பார்ப்பை மரண மாஸாக ஏற்றியுள்ளது. இந்நிலையில் படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ரிலீசுக்கு முந்தைய வியாபாரமும் களைகட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லியோ படத்தின் ப்ரமோஷனையொட்டி பல பேட்டிகளை லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து கொடுத்து வருகிறார். அதில் லியோ குறித்த சுவாரஸ்யங்களை மட்டுமில்லாமல், தன்னுடைய மற்ற படங்கள் குறித்தும் அவர் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சூர்யாவை வைத்து அடுத்தடுத்து ரோலக்ஸ் மற்றும் இரும்புக்கை மாயாவி படங்களை இயக்கவுள்ளது குறித்து அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஐயப்பனும் கோஷியும் என்ற படத்தை சூர்யா மற்றும் நடிகர் கார்த்தியை வைத்து இயக்க தான் முன்னதாக திட்டமிட்டதாகவும் ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை என்றும் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். இந்தப் படத்தை பார்த்தவுடன் தன்னுடைய நினைவில் சூர்யா மற்றும் கார்த்திதான் வந்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் கார்த்தி மற்றும் சூர்யாவை வைத்து தனித்தனியாக படங்களை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
தற்போது லியோ படத்தை இயக்கி முடித்துள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக தலைவர் 171 படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். தொடர்ந்து கைதி 2, விக்ரம் 2, ரோலக்ஸ், இரும்புக்கை மாயாவி என அவரது லைன் அப் நீண்டுள்ளது. இதனிடையே 10 படங்களை இயக்கிவிட்டு சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்பதிலும் அவர் உறுதியாகவே உள்ளார். அதனால் ஐயப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்கை அவர் செய்வாரா என்பது சந்தேகமே. ஆனாலும் இது மிகச்சிறந்த ஐடியாவாக உள்ளதாகவே ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நடிகர்கள் பிரித்வி மற்றும் பிஜு மேனன் நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டில் வெளியானது ஐயப்பனும் கோஷியும் படம். ஆக்ஷன் த்ரில்லராக வெளியான இந்தப் படம் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், ஆந்திர ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வெற்றிப்படமாக மாறியது. இந்தப் படம் தெலுங்கிலும் பீம்லா நாயக் என்ற பெயரில் ரீமேக்கானது. அந்த வகையில் இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











