Lokesh: 6 மாசம் சமூக வலைதளங்களில் இருந்து விலகப்போகும் லோகேஷ்.. அவரே சொன்ன காரணம்!
சென்னை: நடிகர் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். கடந்த 19ம் தேதி வெளியான இந்தப் படம் 2வது வாரத்தில் வெற்றிநடை போட்டு வருகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார் லோகேஷ்.

இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் தற்போது லோகேஷ் ஈடுபட்டுள்ளார்.
லியோ படம்: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 19ம் தேதி திரையரங்குகளில் வெளியானது லியோ. இந்தப் படத்தில் மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜூன், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த 12 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ள நிலையில், தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
தலைவர் 171 படம்: இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கவுள்ளது. லியோ படத்தை வெற்றிகரமாக குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்துள்ள லோகேஷ் கனகராஜ் தற்போது தன்னை ஆசுவாசப்படுத்தி வருகிறார். மேலும் தலைவர் 171 படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
லோகேஷ் இன்டர்வியூ: லியோ படத்தின் ரிலீசுக்கு முன்னதாக அதிகமான பேட்டிகளை கொடுத்திருந்த லோகேஷ், தற்போது ரிலீசை தொடர்ந்து அடுத்தடுத்து இரு பேட்டிகளை கொடுத்துள்ளார். இதன்மூலம் ரசிகர்களுக்கு LCU மற்றும் படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். இதையொட்டி படம் பார்க்கும்போதே பாமர மக்களுக்கும் புரிய வேண்டும் என்றும் இதற்காக தனியாக விளக்கம் அளிக்கக்கூடாது என்ற விமர்சனங்களையும் பெற்று வருகிறார்.
சமூக வலைதளங்களில் இருந்து விலக முடிவு: இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிசியாக அடுத்தடுத்த அப்டேட்களையும் வாழ்த்துக்களையும் கூறிவரும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சமூக வலைதளங்களில் இருந்து 6 மாதங்கள் இடைவெளி எடுத்துக் கொள்ளவுள்ளதாக தற்போது தெரிவித்துள்ளார். முழு மூச்சுடன் தலைவர் 171 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஏப்ரல் மாதத்தில் தலைவர் 171 படம் துவங்கவுள்ள நிலையில், அப்போதுதான் அவர் மீண்டும் சமூக வலைதளங்களில் இணைவார் என்று இதன்மூலம் தெரியவருகிறது.

ரஜினியின் வில்லத்தனம்: தனக்கு ரஜினிகாந்தின் வில்லனிசம் மிகவும் பிடிக்கும் என்றும் அவருடைய வில்லன் பக்கத்தை தான் தலைவர் 171 படத்தில் முடிந்தவரை வெளிப்படுத்துவேன் என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தற்போது சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டாலும் ஒரு காலகட்டத்தில் வில்லனாக மிகப்பெரிய மாஸ் காட்டி வந்தவர் ரஜினிகாந்த். தான் வில்லனாக நடிக்க அதிகமாக விரும்பியதாக ஒரு விருது வழங்கும் விழாவில் அவர் குறிப்பிட்டிருந்தார். தனக்கு ராமனாக வேடம் போடுவதை காட்டிலும் ராவணனாக வேடம் போட மிகவும் பிடிக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











