Lokesh kanagaraj: எம்எஸ் பாஸ்கரோடு இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்த லோகேஷ் கனகராஜ்.. அட!

சென்னை: நடிகர்கள் ஹரீஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர், இந்துஜா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் பார்க்கிங்.

வரும் டிசம்பர் 1ம் தேதி பார்க்கிங் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ள நிலையில் நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் பங்கேற்று படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

Director Lokesh kanagaraj wants to work with Actor MS Bhaskar and revealed in Parking event

பார்க்கிங் படம்: நடிகர்கள் ஹரீஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர், இந்துஜா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள பார்க்கிங் படம் வரும் டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையில் இந்தப் படத்தின் இசை கவனிப்பை பெற்றுள்ளது. படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளன. படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது.

களைகட்டிய ப்ரீ ரிலீஸ் பிசினஸ்: முன்னதாக பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் வெளியான எல்ஜிஎம் படத்தில் நடித்திருந்தார் ஹரீஷ் கல்யாண். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து பார்க்கிங் படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினசும் களைகட்டியுள்ளது. பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. முன்னதாக செப்டம்பர் மாதத்திலேயே இந்தப் படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது டிசம்பர் 1ம் தேதி படம் ரிலீசாகவுள்ளது.

குறுகிய கால தயாரிப்பு: சரியான திட்டமிடலுடன் குறுகிய கால தயாரிப்பாக உருவாகியுள்ளது பார்க்கிங் படம். முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர்களும் வெளியாகி மிகுந்த கவனத்தை பெற்றுள்ளன. இந்நிலையில் படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பங்கேற்றுள்ளார். படக்குழுவினருக்கும் படத்தின் வெற்றிக்கும் அவர் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் பாராட்டு: தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர் தான் படத்தை சில தினங்களுக்கு முன்பு பார்த்ததாகவும் படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுப்பதற்கான அனைத்து அம்சங்களையும் பெற்றுள்ளதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். அய்யப்பனும் கோஷியும், டிரைவிங் லைசென்ஸ் போன்ற படங்களில் காணப்படும் இரு கேரக்டர்களுக்கான ஈகோ அந்தப் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்ததை போலவே இந்தப் படத்திலும் ஹரீஷ் கல்யாண் மற்றும் எம்எஸ் பாஸ்கரின் சண்டையையும் அவர் ஒப்பிட்டுள்ளார்.

பார்க்கிங் செய்வதில் சண்டை: பார்க்கிங் செய்வதில் ஏற்படும் சிறிய சண்டையை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாகவும் அது எப்படி பெரிய அளவில் பிரச்சினையை ஏற்படுத்துகிறது என்பதையும் இந்தப் படம் விவரிக்கிறது. இந்த சண்டையில் ரசிகர்களும் தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட சண்டைகளை பொருத்திப் பார்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் எம்எஸ் பாஸ்கர் நடிப்பிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

எம்எஸ் பாஸ்கருடன் பணியாற்ற லோகேஷ் விருப்பம்: எம்எஸ் பாஸ்கருடன் இணைந்து பணியாற்ற தான் விரும்புவதாக தெரிவித்த லோகேஷ் கனகராஜ், விரைவில் அது நடக்கும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய எம்எஸ் பாஸ்கர், நடிகர் விஜய்யை இருமுறை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தன்னைவிட சிறியவராக இருந்தாலும் மிகப்பெரிய புகழை சினிமாவில் எட்டியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். அவர் எப்போது கூப்பிட்டாலும் நடிக்க தான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X