Benz movie: LCUவில் இணையும் ராகவா லாரன்ஸ்.. திரும்பவும் ஆரம்பிக்கும் லோகேஷ் கனகராஜ்!
சென்னை: நேற்றைய தினம் தன்னுடைய 49வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். இதையொட்டி அவருக்கு பல்வேறு தரப்பினரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தனர். அவரும் தன்னுடைய பிறந்தநாளையொட்டி தன்னுடைய மாற்றம் அறக்கட்டளை சார்பில் விதவை பெண்களுக்கு தையல் மிஷின் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார்.
அவரது பிறந்தநாளையொட்டி அவரது படங்களின் அடுத்தடுத்த போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோ, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்டவை வெளியாகியிருந்தன. லோகேஷ் கனகராஜ் தயாரிப்பிலும் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக பென்ஸ் என்ற படத்தில் இணையவுள்ள நிலையில், இதன் கிளிம்ப்ஸ் வீடியோவும் நேற்றைய தினம் வெளியாகி மாஸ் காட்டியிருந்தது.

நடிகர் ராகவா லாரன்ஸ்: நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்தடுத்த சூப்பர்ஹிட் படங்களில் தன்னை இணைத்துக் கொண்டு வருகிறார். தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், நடன இயக்குனர் என அடுத்தடுத்த தளங்களில் தன்னுடைய பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். காஞ்சனா படங்களின் மூலம் மிகுந்த கவனத்தை பெற்றுள்ள ராகவா லாரன்ஸ், அடுத்ததாக காஞ்சனா 4 படத்தையும் இயக்க உள்ளதாக தெரிகிறது. இதனிடையே மற்ற இயக்குனர்களின் படங்களிலும் பிஸியாக நடித்து வரும் ராகவா லாரன்ஸின் 25வது படமான கால பைரவா படத்தின் அறிவிப்பு நேற்றைய தினம் அவரது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த படங்கள்: இதை தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்க்கலாம். இதனிடையே தன்னுடைய தம்பி எல்வின் லீட் கேரக்டரில் நடித்துள்ள புல்லட் படத்திலும் ராகவா லாரன்ஸ் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவும் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இதனிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாக உள்ள பென்ஸ் படத்திலும் ராகவா லாரன்ஸ் இணைந்துள்ளார்.
பென்ஸ் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ: இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவும் நேற்றைய தினம் ராகவா லாரன்ஸின் பிறந்த நாளையொட்டி வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் எல்சியூவில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இதை தற்போது இந்த வீடியோவில் லோகேஷ் கனகராஜும் உறுதிப்படுத்தியுள்ளார். ராகவா லாரன்ஸை தன்னுடைய எல்சியூவிற்கு அவர் வரவேற்றுள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்தை இயக்கவுள்ள நிலையில் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கவுள்ளார். அவரது ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் முன்னதாக ஃபைட் கிளப் என்ற படத்தை தயாரித்தது. இதனிடையே இந்தப் படத்தை தயாரிப்பதுடன் கதையையும் லோகேஷ் கனகராஜ் எழுதியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் வீடியோ: விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில், ராகவா லாரன்சின் பிறந்தநாளையொட்டி நேற்றைய தினம் வெளியிடப்பட்ட கிளிம்ப்ஸ் வீடியோவில், தன்னுடைய யூனிவர்சிற்கு ராகவா லாரன்ஸை லோகேஷ் கனகராஜ் வரவேற்றுள்ளார். முன்னதாக அவரது யூனிவர்சில் கைதி டில்லி, விக்ரம், லியோ, ரோலக்ஸ் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ள நிலையில், தற்போது அந்த பட்டியலில் ராகவா லாரன்சும் இணைந்துள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் மீன் வெட்டுவதாகவும் அவர்மீது ரத்தம் தெறிப்பதாகவும் காணப்படுகிறது. இதையடுத்து திரும்பவும் ஆரம்பிக்கலாங்களா என்று லோகேஷ் கேட்பதாக இந்த வீடியோ காணப்படுகிறது. முன்னதாக விக்ரம் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில்ல் இதே போன்ற டயலாக்கை கமல்ஹாசன் பேசியிருப்பார். தற்போது ராகவா லாரன்ஸின் பென்ஸ் வீடியோவை வெளியிட்டு லோகேஷ் கனகராஜ் இந்த டயலாக்கை பேசியுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











