தளபதி 67 படத்துக்கப்புறம் லோகேஷ் கனகராஜ் யாரை இயக்கப் போறாரு தெரியுமா? விக்ரம் கனெக்‌ஷனும் இருக்காம்

சென்னை: விக்ரம் படம் 300 கோடி வசூலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்திற்கான வேலைகளை மட்டுமின்றி அதற்கு அடுத்த படத்திற்கான வேலைகளையும் ஆரம்பித்து விட்டாராம்.

இதற்கு மேல் தனது படங்களில் யூனிவர்ஸ் கான்செப்ட் இருந்தால் LCU எனும் லோகேஷ் கனகராஜ் யூனிவர்ஸ் என்கிற வார்த்தையை பயன்படுத்துவேன் எனக் கூறி உள்ளார்.

தளபதி 67 படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆர்ஆர்ஆர் ஹீரோ

ஆர்ஆர்ஆர் ஹீரோ

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரணை அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க போகிறாராம். அதற்கான சந்திப்பாகத்தான் கமல்ஹாசனை அழைத்துக் கொண்டு சிரஞ்சீவி வீட்டுக்கு லோகேஷ் கனகராஜ் சென்று ராம்சரணுக்கு ஒரு சூப்பரான கதையை சொல்லி சம்மதமும் வாங்கி வந்திருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

ஷங்கர் இயக்கத்தில்

ஷங்கர் இயக்கத்தில்

RC15 படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். கியாரா அத்வானி ஜோடியாக நடிக்க ராம்சரண் ஹீரோவாக நடித்துள்ள அந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளதாம். அதிகாரி என டைட்டில் வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்தை முடித்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப் போகிறாராம் ராம்சரண்.

மறுத்துவிட்ட பிரபாஸ்

மறுத்துவிட்ட பிரபாஸ்

முன்னதாக பாகுபலி ஹீரோ பிரபாஸை சந்தித்து தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த கதையை சொல்லி இருக்கிறார். ஆனால், இன்னும் 4 ஆண்டுகளுக்கு தன்னிடம் கால்ஷீட் இல்லை எனக் கூறி பிரபாஸ் லோகேஷ் கனகராஜுக்கு ஓகே சொல்லவில்லயாம். இந்நிலையில், அடுத்ததாக ராம்சரணிடம் அப்ரோச் செய்திருக்கிறார்.

தளபதி 67 முடிந்ததும்

தளபதி 67 முடிந்ததும்

தளபதி 66 திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்துடன் முடிந்து பொங்கலுக்கு படம் வெளியாக உள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் தளபதி 67 படத்தை ஆரம்பிக்க அனைத்து பணிகளையும் செய்து வருகிறாராம் லோகேஷ் கனகராஜ். தளபதி 67 படத்திலேயே ராம்சரணை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறுகின்றனர். ஆனால், அந்த படம் முடிந்ததும் உருவாகும் புதிய படத்தில் ராம்சரண் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகி உள்ளது.

Recommended Video

Marmayogi , Marudhanayagam Release பற்றி பேசிய கமல் | Vikram Success Meet | *Kollywood
விக்ரம் கனெக்‌ஷன்

விக்ரம் கனெக்‌ஷன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கப் போகும் அந்த படத்தில் விக்ரம் படத்தின் கனெக்‌ஷனும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்தையும் முடித்து விட்டு, இறுதியாக விக்ரம் 3 படத்தில் அனைத்து நடிகர்களையும் ஒன்றாக இணைந்து போட்டு அவெஞ்சர் ரேஞ்சுக்கு தமிழ் சினிமாவில் ஒரு பெரிய படத்தை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த போகிறாராம் லொகேஷ் கனகராஜ் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X