என்ன பாஸ் ரொம்ப பெரிய ஆள் ஆகிட்டீங்க போல.. லோகேஷ் கனகராஜை எச்சரிக்கும் ரசிகர்கள்

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கும் சூழலில் அவரது ரசிகர்கள் அவரை எச்சரிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

வங்கி வேலையை உதறிவிட்டு சினிமாவுக்குள் வந்தவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய மாநகரம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று யார் இந்த இயக்குநர் என்று பலரையும் கேட்க வைத்தது. அந்தப் படத்தின் டைட்டில் கார்டு முதல் திரைக்கதை வரை அனுபவம் வாய்ந்த இயக்குநரின் இயக்கம் போலவே இருந்ததாக ரசிகர்கள் கொண்டாடினர்.

கைதி மூலம் பலரையும் கைது செய்த லோகேஷ் கனகராஜ்

கைதி மூலம் பலரையும் கைது செய்த லோகேஷ் கனகராஜ்

அதற்கு அடுத்ததாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு யோசித்த கதைதான் கைதி. கதையை கேட்ட தயாரிப்பு தரப்பு கதை இவ்வளவு அருமையாக இருக்கிறதே ஒரு பெரிய ஹீரோவை வைத்து இதை படமாக்கினால் நன்றாக இருக்கும் என கூற கார்த்தி கைதிக்குள் உள்ளே வந்தார். ஒரு இரவில் நடக்கும் கதையாக வடிவமைத்திருந்த லோகேஷ் கனகராஜின் இயக்கத்தையும், திரைக்கதையையும் பார்த்து பலரும் மிரண்டு போனார்கள். படம் மெகா ஹிட்டானது.

மாஸ்டர் தி ப்ளாஸ்டர் லோகேஷ் கனகராஜ்

மாஸ்டர் தி ப்ளாஸ்டர் லோகேஷ் கனகராஜ்

முதல் இரண்டு படங்களும் இப்படி செம ஹிட்டாக கொடுத்த லோகேஷ் மூன்றாவது படத்தில் விஜய்யை வைத்து இயக்கினார். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டிருந்த அந்தப் படத்தில் இதுவரை யாரும் காணாத விஜய்யை ரசிகர்கள் பார்த்தனர். விஜய்யுடன் விஜய் சேதுபதியும் இணைய படம் அதிரிபுதிரி ஹிட்டானது.

உலக நாயகனை இயக்கிய லோகேஷ் கனகராஜ்

உலக நாயகனை இயக்கிய லோகேஷ் கனகராஜ்

இப்படி வரிசையாக ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் தனது திரைக்கதையில் லோகேஷ் கனகராஜ் உச்சம் தொட்டார். தனது முந்தைய படமான கைதி படத்தின் கதாபாத்திரங்களை இதில் இணைத்து லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் ஒன்றை உருவாக்கினார். இதனாலும், கமல் ஹாசனின் அசத்தலான நடிப்பாலும் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இனி லோகி இயக்கும் அத்தனை படங்களிலும் எல்சியூ இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யை வைத்து சம்பவம் செய்யப்போகும் லோகேஷ் கனகராஜ்

விஜய்யை வைத்து சம்பவம் செய்யப்போகும் லோகேஷ் கனகராஜ்

தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். காஷ்மீரில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படமும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ப்ரோமோவை வைத்து ரசிகர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கின்றனர். இருப்பினும் படம் எப்படி இருந்தாலும் ப்ளாக் பஸ்டர் ஆவது உறுதி என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் செய்யப்போகும் புதிய செயல்; எச்சரிக்கும் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் செய்யப்போகும் புதிய செயல்; எச்சரிக்கும் ரசிகர்கள்

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதல் படத்தை தனது படங்களில் தொடர்ந்து பணியாற்றிவரும் ரத்னகுமார் இயக்கத்தில் லோகேஷ் தயாரிக்கவிருப்பதாகவும், இரண்டாவது படத்தை விக்ரமை வைத்து தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல் பரவியதை அடுத்து லோகேஷ் கனகராஜுக்கு இது வேண்டாத வேலை. தயாரிப்பு பணி என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இயக்கத்தில் சூப்பர் ஸ்டாராக இருக்கும்போது அதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X