முதல்ல விஜய்.. அப்புறமா அஜித்.. மாஸ்டர் டைரக்டருக்கு வந்த ஆசையை பாருங்க!
சென்னை : நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தின் சூட்டிங்கில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்தப்படம் பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் விஜய் இணையவுள்ளார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் வாரிசு படம்
நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதத்தில் கோடை மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியான இவரது பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் விஜய்யின் ரசிகர்கள் அந்தப் படத்தை வசூல் ரீதியாக வெற்றிப் பெற செய்தனர்.

பேமிலி சென்டிமெண்ட் படம்
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது பேமிலி சென்டிமெண்ட் கான்செப்டில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. மேலும் சரத்குமார், பிரபு, குஷ்பூ, ராதிகா சரத்குமார், ஷாம், ஜெயசுதா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.

ஐதராபாத்தில் சூட்டிங்
இந்தப் படத்தின் பூஜை சென்னையில் போடப்பட்டு ஐதராபாத்தில் சூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து சென்னையிலும் தற்போது ஐதராபாத்திலும் வாரிசு படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் சூட்டிங்கை முடித்துக் கொண்டு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை துவங்கவுள்ளது படக்குழு. படம் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தளபதி 67 படத்தில் விஜய்
இந்தப் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணையவுள்ளார் விஜய். இந்தப் படத்தில் 40 வயது கேங்ஸ்டர் ரோலில் நடிக்கவுள்ளார் விஜய். இந்தப் படம் குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளதாகவும் தான் படத்தின் ஸ்கிரிப்ட் வொர்க்கை துவங்கிவிட்டதாகவும் லோகேஷ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அஜித்தை இயக்க விரும்பும் லோகேஷ்
இதனிடையே, விஜய்யை அடுத்து நடிகர் அஜித்தை இயக்கவும் தான் விரும்புவதாக லோகேஷ் தெரிவித்துள்ளார். கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான விஜய்யை இரண்டாவது முறையாக இயக்கும் லோகேஷ் அடுத்ததாக அஜித்தை இயக்கினால் அந்த காம்பினேஷன் எப்படி இருக்கும் என்று இப்போதே ரசிகர்கள் யோசிக்கத் துவங்கிவிட்டனர்.

லோகேஷிற்காக காத்திருக்கும் படங்கள்
ஆனால் தளபதி 67 படத்திற்கு பிறகு விக்ரம் 3 மற்றும் கைதி 2 என இவர் இயக்கத்திற்காக படங்கள் காத்திருக்கின்றன. விக்ரம் படத்தின் பிரமோஷனின்போதே விக்ரம் 3 படத்தின் அறிவிப்பையும் கமல் வெளியிட்டு விட்டார். இந்நிலையில் அஜித்தை இயக்கும் தன்னுடைய ஆசையை லோகேஷ் வெளியிட்டுள்ளார்.

எதிர்பார்ப்பை எகிற செய்த தளபதி 67
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு படங்களை மட்டுமே இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கேங்ஸ்டர் கதைக்களங்களை கையில் எடுத்து அதை தனது திரைக்கதையால் மெருகேற்றி வருகிறார். இந்நிலையில் விஜய்யை தன்னுடைய 100 சதவிகித ஸ்டைலில் இயக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளது தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











