Sathyaraj:சத்யராஜ் பிறந்தநாளுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த பரிசு.. கூலி படத்திலும் கட்டப்பா கெட்டப்பா?

சென்னை: தமிழ் சினிமாவில் உள்ள சீனியர் நடிகர்களில் சத்யராஜும் ஒருவர். இன்றைக்கு அவருக்கு 70வது பிறந்த நாள். தனது சினிமாக்களில் தனது நக்கலான நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர்களை இப்போதுவரை தக்கவைத்துக்கொண்டுள்ளார். சத்யராஜ் ஒரு படத்தில் இருக்கின்றார் என்றால் அந்தப் படத்தில் சத்யராஜ் டச் உடன் சில காட்சிகள் இருக்கும். அப்படியான காட்சிகளுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் இப்போதுவரை நல்ல வரவேற்பு உள்ளது. இன்று தனது 70வது பிறந்த நாளைக் கொண்டாடும் சத்யராஜ்க்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சத்யராஜ் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தில் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். கூலி படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 171வது படம். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றார்கள். இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகின்றார்.

sathyaraj lokesh kanagaraj sathyaraj birthday

வாழ்த்து: இன்றைக்கு படத்தில் நடிக்கும் சத்யராஜின் 70வது பிறந்த நாள் என்பதால் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் சத்யராஜ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “ கூலி படத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்றியது உண்மையிலேயே எனக்கு மறக்கமுடியாத காலத்திற்கும் நினைவுகூறத்தக்க அனுபவமாக அமைந்துள்ளது. மேலும் உங்களுடன் பணியாற்றியது எனக்கு கற்றல் அனுபவத்தையும் கொடுத்தது. உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சார். உங்கள் நடிப்பின் மூலம் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றிகள் சார்” என பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள்: மேலும் இந்தப் பதிவுடன் படப்பிடிப்புத் தளத்தில் சத்யராஜுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துகொண்டார். இந்த புகைப்படத்தைப் பார்க்கும்போது பாகுபலி படத்திற்குப் பின்னர் சத்யராஜ் கட்டப்பா கதாபாத்திரத்தைப்போல் முழுக்க முழுக்க மொட்டை அடித்துக் கொண்டு நடிக்கின்றார் என்பது மட்டும் தெளிவாகின்றது. மேலும் சத்யராஜ் தனது திரை வாழ்க்கையை வில்லன் கதாபாத்திரமாகவே தொடங்கினார். மேலும் அப்போதெல்லாம் அதிகம் முழுக்க முழுக்க மொட்டை அடித்துக் கொண்டு கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். எனவேதான் லோகேஷ் கனகராஜ் சத்யராஜின் கதாபாத்திரத்தை இப்படி வடிவமைத்துள்ளார் என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X