Coolie: மஞ்சுமெல் பாய்ஸ் நாயகனுக்கு பிறந்தநாள்.. தலைவர் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்
சென்னை: மலையாள சினிமாவில் இன்றைக்கு தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் சௌபின் சாகிர். இன்று அதாவது அக்டோபர் 12ஆம் தேதி தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவர் மலையாள நடிகர் என்றாலும் இவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். உதவி இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய இவர் அதன் பின்னர் நடிப்பின் பக்கம் திரும்பினார். ஆண்ட்ரியா, ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியான அன்னையும் ரசூலும் படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல வெற்றிப் படங்களில், குறிப்பாக மலையாள சினிமாவை உலகமே பாராட்டும் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
குணச்சித்ர வேடங்களில் நடித்துவரும் சௌபின் சாகிர் அண்மையில் வெளியாகி வசூலில் செம ஹிட் அடித்த மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். அதேபோல் கும்பலாங்கி நைட்ஸ் படத்தில் மிகவும் எதார்த்தமான நடிப்பினை நடித்து படத்தின் தரம் மேலும் உயர ஒரு காரணமாக அமைந்தார். இவர் இன்னும் நேரடியான தமிழ் படத்தில் நடித்ததில்லை. இந்நிலையொல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தில் தயாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். கூலி படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 171வது படம். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றார்கள். இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகின்றார்.

பிறந்த நாள்: சௌபின் சாகிர் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதால் அவருக்கு அவரது ரசிகர்கள் ஏற்கனவே வாழ்த்துகளை இணையத்தில் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். தலைவரின் கூலி படத்தில் இவர் நடிக்கின்றார் என்ற தகவல் வெளியானதும் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். காரணம் படத்தினை லேகேஷ் கனகராஜ் இயக்குவதால், படம் கட்டாயம் எல்.சி.யூவில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். அப்படி படம் எல்.சி.யூவில் இருந்தால் படத்தில் இவருக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு உள்ளனர்.
லேகேஷ் கனகராஜ்: இந்நிலையில் இவருக்கு இன்று பிறந்த நாள் என்பதால் கூலி படக்குழுவின் சார்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், சௌபின் சாகிருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, " கூலி படத்தில் உங்களுடன் பணி புரிந்தது மிகவும் உற்சாகமான அனுபவம் சார். உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில் கூலி படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

மீட்டிங்: கூலி படத்தில் கமிட் ஆன பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்று அவரது வீட்டிலேயே சௌபின் சாகிர் சந்தித்தார். கூலி படத்தின் அறிவிப்பு வெளியானதுமே பலரது மனதில் மகிழ்ச்சியைக் கொடுத்த செய்தி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு நெகடிவ் ஷேட் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்பதுதான்.அதேபோல் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் படம் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இந்தப் படம் இடம் பெறுமா என்ற கேள்விக்கு இப்போது வரை பதில் கிடைக்கவில்லை.



Click it and Unblock the Notifications











