Lokesh: ஜவான் படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொன்ன லோகேஷ்.. ஷாருக் என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: நடிகர் ஷாருக்கானின் ஜவான் படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.
படத்திற்கு சிறப்பான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக முதல் பாதி சிறப்பாக அமைந்துள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது பாதி சராசரிக்கும் மேல் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் அதிகமான தென்னிந்திய நடிகர்கள் நடித்துள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் பாலிவுட்டில் சிறப்பான ஓபனிங்கை படம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

ஜவான் படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொன்ன லோகேஷ்: நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியா மணி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஜவான் படம் சர்வதேச அளவில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. கடந்த ஜனவரியில் ஷாருக்கானின் பதான் படம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலையும் குவித்துள்ள நிலையில், தற்போது ஜவான் படமும் அந்த எதிர்பார்ப்புகளுடனேயே ரிலீசாகியுள்ளது.
படம் எதிர்பார்த்தபடியே சிறப்பாக அமைந்துள்ளது. மாஸ் என்டர்டெயினராக படம் ரசிகர்களை கவர்ந்து முதல் நாளிலேயே ஏராளமான ரசிகர்களை திரையரங்குகளை நோக்கி படையெடுக்க வைத்துள்ளது. முன்னதாக ப்ரீ புக்கிங்கிலேயே 50 கோடி ரூபாய்களை ஜவான் படம் வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜவான் வெளியாகியுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் படத்தின் ப்ரமோஷன்களை படக்குழுவினர் சிறப்பாக மேற்கொண்டனர்.
முன்னதாக ஜவான் படத்தின் ரிலீசையொட்டி ஷாருக்கான் திருப்பதி கோயிலுக்கு சென்றிருந்ததும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் #BoycottJawanmovie ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டானது. இந்நிலையில் தற்போது சர்வதேச அளவில் படம் சரியான விமர்சனங்களையும் வசூலையும் குவித்து வருகிறது. படம் கண்டிப்பாக எதிர்பார்த்தபடி 1500 கோடி ரூபாய் கலெக்ஷனை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளனர் நயன்தாரா மற்றும் இசையமைப்பாளர் அனிருத். இருவருமே தற்போது ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்று வருகின்றனர். நயன்தாராவின் என்ட்ரி படத்தில் சிலாகிக்கப்பட்டு வருகிறது. அனிருத்தின் இசையில் மூன்று பாடல்கள் ரிலீசுக்கு முன்னதாகவே லிரிக் வீடியோவாக வெளியான நிலையில், அவருக்கும் இந்தப் படம் பாலிவுட்டில் சிறப்பான என்ட்ரியை கொடுக்கும் என்பது தெரிகிறது.
அட்லி இயக்கத்தில் ஜவான் படம் வெளியாகியுள்ள நிலையில், விஜய்யின் லியோ படத்தை இயக்கிவரும் லோகேஷ் கனகராஜ் படத்தின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஷாருக்கான், அட்லி, அனிருத், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினருக்கு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் லோகேஷிற்கு ஷாருக்கான் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் கண்டிப்பாக ஜவான் படத்தை தமிழில் பார்த்துவிட்டு விமர்சனங்களை தெரிவிக்கவும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் லியோ படத்திற்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











