Actor Sri Health: மருத்துவமனையில் நடிகர் ஸ்ரீ.. நண்பனுக்காக ஓடோடி வந்த லோகேஷ் கனகராஜ்.. இப்பதான் நிம்மதி

சென்னை: தமிழ் சினிமாவில் மிகக் குறைவான படங்களில் நடித்திருந்தாலும், தனக்கென முத்திரையினைப் பதித்தவர் நடிகர் ஸ்ரீ. இவரது எதார்த்தமான நடிப்பு, படத்திற்கு பலமாக இருந்தது மட்டும் இல்லாமல், படம் குறித்து பேசவும் வைத்தது. கடைசியாக சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது நடிப்பில் இறுகப்பற்று படம் வெளியானது. அதன் பின்னர் இவரை படங்களில் பார்க்க முடியவில்லை. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்த இவர், திடீரென ஆபாசமான பதிவுகளை பகிர அனைவருக்கும் ஷாக் ஆனது.

இது ஒருபுறம் இருக்க, இவரது சமீபத்திய புகைப்படம் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இவரது புகைப்படத்தை பார்த்த மருத்துவர்கள், அவருக்கு காச நோய் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்கள். திரைத்துறையிலும் இவரது உடல் நிலை மற்றும் நடவடிக்கைகள் குறித்து பலரும் பல விதமாக கூற, இவரது விஷயம் அனைவருக்கும் ஷாக் கொடுத்தது.

Director Lokesh Kanagaraj X Page Post About Actor Sri Health Update

இப்படியான நிலையில் இவரது உடல்நிலை குறித்து இயக்குநரும், நடிகர் ஸ்ரீ-யின் நண்பருமான, லோகேஷ் கனகராஜ் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். தற்போது அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி சமூக வலைதளத்தில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு எடுத்துள்ளார். மேலும் அவருக்கு தற்போது தேவை என்பது, நிம்மதிதான். மேலும் அவரை யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

Director Lokesh Kanagaraj X Page Post About Actor Sri Health Update

நாங்கள் உங்களிடத்தில் தயவு கூர்ந்து கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். அதாவது, அவரது உடல்நிலை குறித்து தவறான தகவல்களை யாரும் பகிர வேண்டாம். அவை மிகவும் எங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. தயவு கூர்ந்து அவரது உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் அடங்கிய செய்திகள், வீடியோக்கள் ஆகியவற்றை நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். நடிகர் ஸ்ரீ-யின் உடல்நிலை குறித்து தவறான தகவல்களை உறுதிப்படுத்தப்படாத தகவல்களை எக்காரணம் கொண்டும் பரப்ப வேண்டாம். இந்த நெருக்கடியான நேரத்தில் எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் நன்றிகள்" என தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது மட்டும் இல்லாமல், நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

நடிகர் ஸ்ரீ, இயக்குநர் லோகேஷ் கனகராஜின் மிகவும் நெருக்கமான நண்பர். லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம் படத்தில் நடிகர் ஸ்ரீ நாயகனாக நடித்திருப்பார். அதன் பின்னர் லோகேஷ் கனகராஜின் படங்களில் இவர் நடிக்கவில்லை என்றாலும் இவர்களுக்கு இடையிலான நட்பு என்பது இருந்து கொண்டுதான் இருந்தது. இப்படியான நிலையில்தான், நடிகர் ஸ்ரீ கடந்த ஒரு ஆண்டாக மிகவும் மாறியுள்ளார் என கூறப்படுகிறது.

நடிகர் ஸ்ரீ நேற்று அதாவது ஏப்ரல் 17ஆம் தேதி வெளியிட்டிருந்த தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில், “ நான் கடந்த ஒரு ஆண்டு நான்கு மாதங்கள் மற்றும் 16 நாட்களாக சிக்ரெட் புகைப்பதில்லை. நான் அவற்றை கடந்த 2024ஆம் ஆண்டு புத்தாண்டில் இருந்தே விட்டுவிட்டேன். ( அவர் சொல்லும் கணக்குப்படி, ஒரு ஆண்டு 3 மாதங்கள் 16 நாட்கள் ஆகிறது) தெளிவு படுத்துவதற்காக இந்த வீடியோவைப் பதிவிடுகிறேன் என்று பேசியுள்ளார். மேலும் சிகரெட்டை விட்ட முதல் 90 நாட்களில் அதற்கு பதிலாக பால் கலக்காத காபியைக் குடித்தேன் எனவும், அனைவரும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X