Kaithi 2 Update: கைதி ரிலீஸ் ஆகி 5 வருசம் ஆச்சு.. கைதி 2க்கு அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார். தனது முதல் படத்திலேயே தமிழ்த் திரையுலகின் கவனத்தினை ஈர்த்த இயக்குநராக மாறினார். மாநகரம் படத்தின் கதை மற்றும் திரைக்கதை பலரது பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. அதன் பின்னர் இவர் இயக்கிய கைதி படம் இவரது சினிமா வாழ்க்கையின் திசையை மொத்தமாக தீர்மானிக்கப்போகின்றது என்பது உண்மையிலேயே அவருக்கு அப்போது தெரிந்திருக்குமா என்றால் அதற்கு லோகேஷ் கனகராஜ்க்கு மட்டும்தான் பதில் தெரியும். இந்நிலையில் கைதி படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கைதி படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

கைதி படம் கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் அக்டோபர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆனது. அதாவது இந்தப் படம் கடந்த 2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. அப்போது விஜய்யின் பிகில் படமும் வெளியானது. பிகில் படம் வசூலில் பெரும் வெற்றி பெற்றாலும் கைதி படம் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸில் படம் கிட்டத்தட்ட ரூபாய் 30 கோடிகள் வரை வசூல் செய்ததாக கூறப்படுகின்றது.

lokesh kanagaraj kaithi 5 years of kaithi

இந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முழுவதுமாக எந்தப் படத்தின் சாயலும் இல்லாமல் வெளியான படம் எனலாம். அந்தப் படத்தின் பின்னணி இசை தொடங்கி ஒவ்வொரு காட்சியும், திரைக்கதையும் அனைவரையும் ஆச்சரியப்படவைத்தது. படத்தில் ஒரு பாடல் கூட இல்லை. ஆனால் படம் கமெர்ஷியலாக வெற்றி பெற்றது.

LCU: இந்தப் படத்தில் இருக்ககூடிய டில்லி, கான்ஸ்டெபிள் நெப்போலியன் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தில் இருந்தனர். இதில் இருந்துதான் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற ஒன்றே தொடங்கியது. இதுவரை லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் கைதி, விக்ரம் மற்றும் லியோ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவரது சினிமாட்டிக் யுனிவர்ஸில் கைதி 2, விக்ரம் 2 மற்றும் ரோலக்ஸ் ஆகிய படங்கள் உருவாகவுள்ளது.

lokesh kanagaraj kaithi 5 years of kaithi

5 ஆண்டுகள்: மேலும் தற்போது ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தினை இயக்கி வருகின்றார். இந்தப் படமும் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இடம் பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளனர். இப்படியான நிலையில், கைதி படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் ஐந்து ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

lokesh kanagaraj kaithi 5 years of kaithi

கைதி 2: அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, "எல்லாம் இங்கிருந்துதான் தொடங்கியது. கார்த்தி சாருக்கும் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு சாருக்கும் நன்றி. சினிமாட்டிக் யுனிவர்ஸ் தொடங்கியதற்கு முக்கிய காரணமே நீங்கள்தான்" எனவும், டில்லி விரைவில் திரும்ப வருவார்" என பதிவிட்டுள்ளார். ஏற்கனவே கைதி படத்தின் இரண்டாம் பாகத்தினைப் பொறுத்தவரையில் தனது சினிமாட்டிக் யுனிவர்ஸில் இருக்கக்கூடிய அனைத்து கதாபாத்திரங்களும் இருக்கும் என அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தன்னால் ரத்தம், போதைப்பொருள் இல்லாமல், படம் எடுக்க முடியாது என அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X