Fight club movie: ராவணமவனே.. மிரட்டும் Fightclub படத்தின் பாடல்.. படத்திற்கு கிடைத்த சான்றிதழ்!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகும் Fight Club. இந்தப் படத்தை தனது ஜி ஸ்குவாட் நிறுவனம் மூலம் லோகேஷ் தயாரித்துள்ளார்.

உறியடி படம் மூலம் கவனம் பெற்ற விஜய்குமார் இந்தப் படத்தில் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி மிக அதிக கவனத்தை பெற்றுள்ளது.

Director Lokesh kanagarajs Fight club movie censored and gets A certificate

இந்தப் படத்தை அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ளார். படத்தின் இரண்டாவது பாடலும் மிரட்டலான வகையில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: இயக்குநராக அடுத்தடுத்த 5 வெற்றிப்படங்களை கொடுத்து மாஸ் காட்டி வருகிறார் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் சமீபத்தில் வெளியான லியோ என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து மிரட்டியுள்ளார். அடுத்ததாக ரஜினியுடன் தலைவர் 171 படத்திலும் கமிட்டாகியுள்ளார். லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தலைவர் 171 படத்தில் லியோ கற்றுக் கொடுத்த படிப்பினைகளை கொண்டு செயல்பட்டு வருவதாக பேட்டியொன்றில் அவர் கூறியிருந்தார்.

தயாரிப்பாளராக மாறிய லோகேஷ்: இந்நிலையில் அவர் அடுத்ததாக தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார். ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளதாக சமீபத்தில் அவர் அறிவித்திருந்த நிலையில் உடனடியாக அவரது தயாரிப்பில் ஃபைட் கிளப் என்ற படத்தின் அறிவிப்பும் தொடர்ந்து ரிலீஸ் அறிவிப்பும் வெளியானது. தன்னுடைய நண்பர்கள், உதவி இயக்குநர்களுக்கு இந்த நிறுவனம் மூலம் வாய்ப்புகளை வழங்கவுள்ளதாக அவர் அறிவித்திருந்தார்.

ஃபைட் கிளப் படம்: அவரது தயாரிப்பில் முதல் படமாக ஃபைட் கிளப் படம் வரும் டிசம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் உறியடி மூலம் கவனம் பெற்ற நடிகரும் இயக்குநருமான விஜய்குமார் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் வசனம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டீசர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி அதிரடி சரவெடியாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

மிரட்டும் 2வது சிங்கிள்: அதிரடி ஆக்ஷன் களத்தில் உருவாகியுள்ள ஃபைட் கிளப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. முன்னதாக வெளியான யாரும் காணாத விண்மீனே பாடல் அதிகமான வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ராவணமவனே என்ற பாடல் மிரட்டலான வகையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

லோகேஷ் கனகராஜ் திட்டம்: இந்தப் படத்தில் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் டீசர் வெளியாகி யூடியூவில் ஏறக்குறைய 4 மில்லியன் வியூஸ் பெற்றுள்ள நிலையில், தற்போது இந்த இரண்டாவது பாடலும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தன்னுடைய உதவி இயக்குநர் உள்ளிட்டவர்களுக்கு தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் வாய்ப்புகளை வழங்கவுள்ளதாக லோகேஷ் கூறியுள்ள நிலையில், அவரது இந்த முதல் படம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதனிடையே இந்தப் படத்திற்கு தற்போது ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X