Rajinikanth: LCU நடிகர்கள் இருப்பாங்க.. ஆனா LCU படம் இல்லை.. என்னங்க சார் உங்க திட்டம்?

சென்னை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக உள்ளது கூலி படம். அடுத்த மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக முன்னதாக தனது பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தியிருந்தார். முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முன்னதாக லோகேஷ் கனகராஜ் படங்களில் இடம்பெற்றிருந்த LCU இந்தப் படத்தில் கிடையாது என்று முன்னதாகவே லோகேஷ் கனகராஜ் தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் எந்த மாதிரியான கதைக்களத்தில் உருவாகும் என்று அறிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Director Lokesh kanagaraj s LCU not in Coolie movie but LCU actors joined in the movie it seems

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்துடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள படம் கூலி, லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ என மாஸ் வெற்றி படங்களை கொடுத்துள்ள நிலையில் கடந்த ஆண்டில் லோகேஷ் கலகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தபோதிலும் இந்த படத்தின் வசூல் 600 கோடிகளை தாண்டி சாதனை படைத்ததாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

ரஜினியுடன் இணைந்த நாகார்ஜுனா: இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டவர்கள் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் ஜோடியாக ஷோபனா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் தொடர்ந்து படத்தினை எந்தவிதமான பதட்டமும் இன்றி நிதானமாக எடுக்கவுள்ளதாகவும் அடுத்த ஆண்டில் தான் இந்த படம் கோடை கொண்டாட்டமாக வெளியாகும் என்றும் முன்னதாக தன்னுடைய பேட்டியில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் ரஜினிகாந்தை வித்தியாசமாக காட்ட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கூலி படத்தின் டைட்டில் டீசர்: இதுவரை அவர் ஏற்காத கேரக்டரில் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் மேலும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. ரஜினிகாந்த் சிறப்பான லுக்குடன் டைட்டில் டீசரில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். படம் தங்க கடத்தலை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் ரஜினி கேரியரில் மிக பிரம்மாண்டமாக வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்தப் படத்தில் பெற்ற கலவையான விமர்சனங்களை இந்தப் படத்தில் களைய அவர் முயற்சி மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறியிருந்தார்.

LCU குறித்த அப்டேட்: இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளுக்காக அதிகமான காலகட்டங்களை லோகேஷ் எடுத்துக் கொண்டுள்ளார். சமீபத்தில் தன்னுடைய ஸ்கிரிப்ட் டீமுடன் அவர் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் LCU கிடையாது என்று முன்னதாகவே அவர் அறிவித்துள்ளார். ஆனால் தன்னுடைய முந்தைய படங்களில் நடித்திருந்த LCU கேரக்டர்கள் இந்த இடத்தில் இடம் பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்தப் படம் மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X