Lokesh kanagaraj: நாளை வெளியாகும் லோகேஷ் கனகராஜின் அடுத்தப்பட அறிவிப்பு.. என்னன்னு பாருங்க!
சென்னை: மாநகரம் படத்தில் துவங்கியது லோகேஷ் கனகராஜின் திரைப்பயணம். வங்கியில் வேலை, சில குறும்படங்களை மட்டுமே இயக்கிய அனுபவம் இதை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு மாநகரம் படத்தை இயக்கினார். ஒரே இரவில் நடக்கும்படியான இந்தப் படம் ஹிட்டடிக்க, தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே கவனம் ஈர்த்தது. இதில் குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்தது.
கடந்த ஆண்டில் வெளியான விஜய்யின் லியோ படம் அவருக்கு சொதப்பலான விமர்சனங்களை பெற்றுத் தந்தது. ஆயினும் படம் வசூலில் பின்னி பெடல் எடுத்தது. தற்போது ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ள சூழலில் வரும் ஜூன் மாதத்திலிருந்து இந்தப் படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதனிடையே தயாரிப்பாளராகவும் மாஸ் காட்டி வருகிறார். இவரது தயாரிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஃபைட் கிளப், லோகேஷிற்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: குறுகிய காலத்திலேயே வெறும் ஐந்து படங்களை மட்டுமே இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் இந்திய அளவில் தற்போது மோஸ்ட் வான்டட் இயக்குனர். இவரது முதல் படம் மாநகரம் மிகப்பெரிய ஹிட்டடித்த சூழலில் அடுத்தடுத்து கார்த்தி, கமல்ஹாசன், விஜய் ஆகியோருடன் கூட்டணி சேர்ந்து கைதி, மாஸ்டர், லியோ, விக்ரம் என வெற்றி படங்களை கொடுத்துள்ளார், இதில் கடந்த ஆண்டில் வெளியான லியோ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆயினும் வசூலில் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் தற்போது ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
தலைவர் 171 படம்: இந்தப் படத்தின் சூட்டிங் வரும் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ள சூழலில் முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. வரும் 22ம் தேதி இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான ஷூட்டிங் கடந்த இரு தினங்களாக சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் நடந்து முடிந்துள்ளது. போஸ்டரே வித்தியாசமாக காணப்பட்ட சூழலில் அடுத்ததாக வெளியாகவுள்ள டைட்டில் ப்ரோமோ குறித்து ரசிகர்கள் மிகுதியான ஆர்வத்தை தெரிவித்து வருகின்றனர். இந்தப்படத்தின் டைட்டில் கழுகு என்று கூறப்படுகிறது.
லோகேஷின் அடுத்தப்பட அறிவிப்பு: இது உண்மையா என்பது குறித்து இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். இதனிடையே தயாரிப்பாளராகவும் உருமாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ், அவரது தயாரிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஃபைட் கிளப் படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியது. படத்தை அப்பாஸ் அகமது இயக்கியிருந்தார். இந்நிலையில் அடுத்ததாக மீண்டும் தயாரிப்பில் இறங்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் அறிவிப்பு நாளை மாலை தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாளை வெளியாகும் அறிவிப்பு: முன்னதாக தன்னுடைய நண்பர்களால்தான் தான் இயக்கத்தில் நம்பிக்கையுடன் இறங்கியதாகவும் அவர்களை வைத்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை தயாரிக்கவுள்ளதாகவும் லோகேஷ் தெரிவித்திருந்த நிலையில் அவரது அடுத்தப்பட அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது தயாரிப்பில் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகுமா என்பது குறித்து நாளை தெரியவரும்.


Click it and Unblock the Notifications











