Lokesh kanagaraj: LCUவில் இடம்பெறும் இறுதிப்படம்.. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் விக்ரம் 2!

சென்னை: மாநகரம் படம் மூலம் தன்னுடைய சினிமா பயணத்தை கோலிவுட்டில் துவங்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்போது ரஜினிகாந்தை இயக்கும் அளவிற்கு கோலிவுட்டில் முன்னேற்றம் கண்டுள்ளார், இடையில் கார்த்தி, விஜய், கமல்ஹாசன் ஆகியோரை வைத்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பான் இந்தியா இயக்குனராகவும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த வகையில் அடுத்ததாக ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ள லோகேஷ் கனகராஜ் அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

இந்த படத்தின் வேலைகள் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்த மாதத்துடன் அந்த படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்ய உள்ளார், லோகேஷ் கனகராஜின் படங்களில் சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது LCU. தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் இதை லோகேஷ் கனகராஜ் எப்படி கையாள போகிறார் என்பது குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். விக்ரம் படத்தில் LCU மிகச்சிறப்பாக அமைந்தது. ஆனால் விஜய்யின் லியோ படத்தில் எல்சியூ திணிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன, இந்நிலையில் தலைவர் 171 படத்தில் எல்சியூ கான்செப்ட் எப்படி இடம்பெறும் என்பது குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Director Lokesh kanagaraj s Vikram 2 movie going to be LCU s last part it seems

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: இயக்குனர் லோகேஷ் கனகராஜின் திரைப்பயணம் மாநகரம் படத்தில் துவங்கியது. இந்த படத்தை தொடர்ந்து கார்த்தியுடன் கைதி படத்தையும் விஜய்யுடன் அடுத்தடுத்து மாஸ்டர் மற்றும் லியோ படங்களையும் கமல்ஹாசனுடன் விக்ரம் படத்தையும் இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படங்கள் அனைத்துமே மிகச் சிறப்பான வெற்றியை லோகேஷ் கனகராஜிற்கு பெற்றுத் தந்துள்ளன. இதில் கமல்ஹாசனுடன் லோகேஷ் இணைந்து பணியாற்றிய விக்ரம் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது. இந்தப்படம் கமல்ஹாசனுக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மிகச் சிறப்பாக கை கொடுத்தது. லோகேஷ் கனகராஜிற்கு அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் இணையும் வாய்ப்புகளை பெற்றுத்தந்தது.

அடுத்தடுத்த வெற்றிப்படங்கள்: இந்தப்படத்தை தொடர்ந்து விஜய்யுடன் இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைந்து பணியாற்றிய லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக ரஜினிகாந்துடன் தலைவர் 171 படத்தில் இணையவுள்ளார். இந்தப்படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் அல்லது மே மாதத்தில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் படங்களில் சிறப்பாக பார்க்கப்படுவது எல்சியூ. ஹாலிவுட் படங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த கான்செப்ட்டை தமிழில் புகுத்தியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

லோகேஷின் எல்சியூ: கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் எல்சியூ மிகச் சிறப்பாக அமைந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோர் சிறப்பான பங்களிப்பை செய்திருந்தனர். சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் படத்தில் மிகப்பெரிய பாதிப்பையும் வெற்றிக்கான காரணமாகவும் அமைந்திருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டில் வெளியான லியோ படத்தில் லோகேஷ் கனகராஜின் எல்சியூ கான்செப்ட் திணிக்கப்பட்டு இருந்ததாக ரசிகர்கள் விமர்சனங்களை முன் வைத்தனர். இந்நிலையில் அடுத்ததாக ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தில் எல்சியூவை எப்படி பயன்படுத்துவார் என்பது குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எல்சியூவின் இறுதிப்படம் விக்ரம் 2?: தலைவர் 171 படத்தை தொடர்ந்து கைதி 2 மற்றும் விக்ரம் 2 படங்களை லோகேஷ் அடுத்தடுத்து இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் விக்ரம் 2 படம் எல்சியூவின் இறுதி படமாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப்படம் உருவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விக்ரம் படத்தில் அதிரடியாக அமைந்திருந்த சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் தனியாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் விக்ரம் 2 படத்தில் இந்த கேரக்டர் அமையுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது எல்சியூ குறித்த ஒரு குறும்படத்தை லோகேஷ் கனகராஜ் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X