Lokesh Kanagaraj: நெல்சனால் உயர்ந்த லோகேஷ் கனகராஜின் சம்பளம்.. அட இது புதுசால்ல இருக்கு!
சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
வாரிசு படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் விஜய். இந்தப்படத்தின் இசை வெளியீடு இந்த மாத இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளது.
படத்தின் முதல் பாடல் வெளியாகி மாஸ் காட்டிய நிலையில், இன்னும் சில தினங்களில் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் நெல்சனால் உயர்ந்த லோகேஷ் சம்பளம்: நடிகர் விஜய்யுடன் த்ரிஷா 14 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்துள்ள படம் லியோ. இந்தப் படத்திலும் இவர்களது காம்பினேஷன் மிகவும் ப்ரெஷ்ஷாக காணப்படுகிறது. இந்தப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். படத்தில் விஜய், த்ரிஷாவுடன் மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்களின் கூட்டணியையும் பார்க்க முடிகிறது. வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது லியோ.
இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை மற்றும் தலக்கோணம் ஆகிய இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாடல் விஜய் பிறந்தநாளில் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. அன்றைய தினம் படத்தின் போஸ்டர்களும் வெளியாகின. இதையடுத்து நடிகர்கள் அர்ஜூன் மற்றும் சஞ்சய் தத் பிறந்தநாட்களையொட்டி அவர்களின் கிளிம்ப்ஸ் வீடியோக்களும் வெளியாகின. குறிப்பாக அர்ஜூனின் கிளிம்ப்ஸ் வீடியோ மாஸ் காட்டி வருகிறது.
அந்த வகையில் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்படுகிறது. சமீபத்தில் லண்டனில் இந்தப் படத்தின் புக்கிங் ரிலீசுக்கு 6 வாரங்களுக்கு முன்னதாகவே துவங்கப்பட்டது. ஒரே நாளில் இந்தப் படத்தின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இதனால் சர்வதேச அளவில் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு வெளிப்படையாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு வெளிநாட்டில் இருந்த விஜய், தற்போது சென்னை திரும்பியுள்ளார். அவர் அடுத்தடுத்து படத்தின் வேலைகளை துரிதப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தின் இசை வெளியீடு இந்த மாத இறுதியில் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில்தான் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று தயாரிப்பாளர் லலித்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். படத்தின் முதல் பாதியை தான் பார்த்ததாகவும் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாகவும் அவர் லோகேஷுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்னும் சில தினங்களில் படத்தின் இரண்டாவது பாடலும் வெளியாகவுள்ளது.
கடந்த வாரத்திலேயே இதுகுறித்து படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தும் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாளைய தினம் இந்தப் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்தில் லோகேஷின் சம்பளம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தப் படத்திற்காக லோகேஷிற்கு படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் 12 கோடி ரூபாய் கொடுப்பதற்கே திட்டமிட்டிருந்தாராம்.
ஆனால் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு ஜெயிலர் படத்திற்காக 22 கோடி ரூபாய் கொடுக்க தயாரிப்பாளர் திட்டமிட்டது குறித்து லலித்குமாருக்கு தெரியவந்த நிலையில், லோகேஷிற்கும் 20 கோடி ரூபாய் கொடுக்க அவர் முன்வந்துள்ளார். லோகேஷின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாகவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். லலித்குமாருக்கும் லோகேஷிற்கும் இடையில் பிரச்சினை என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியான நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











