twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிறுகதையை மீண்டும் படமாக்கும் இயக்குனர்.. மணப்பாடு பின்னணியில் நெஞ்சை உலுக்கும் யதார்த்த கதை..!

    By
    |

    சென்னை: இரண்டு சிறுகதைகளை இணைத்து சினிமாவாக்க இருப்பதாகச் சொன்னார் பிரபல இயக்குனர்.

    நடிகை அர்ச்சனா, பிரகாஷ்ராஜ், ரேவதி, ஈஸ்வரிராவ், நாசர் உட்பட பலர் நடித்த படம் அழியாத கோலங்கள் 2.

    எம்.ஆர்.பாரதி இயக்கிய இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் லாபம் சம்பாதித்தது.

    என்னோட க்யூட்டி.24 வயசு வித்தியாசம் இருந்தாலும் என்னா அன்யோன்யம்..பிகினியில் ஆட்டம்போடும் பிரபல ஜோடிஎன்னோட க்யூட்டி.24 வயசு வித்தியாசம் இருந்தாலும் என்னா அன்யோன்யம்..பிகினியில் ஆட்டம்போடும் பிரபல ஜோடி

    சிறுகதை

    சிறுகதை

    இது, மேற்கு வங்க எழுத்தாளர் சௌமிக் மித்ராவின் சிறுகதையை அடிப்படையாக வைத்து, உருவான படம். பிரபல இயக்குனர் பாலு மகேந்திராவின் நினைவாக, இந்தப்படத்துக்கு 'அழியாத கோலங்கள் 2' என பெயர் வைத்ததாக எம்.ஆர்.பாரதி அப்போது தெரிவித்திருந்தார். இந்தப் படத்தில், எழுத்தாளராக பிரகாஷ்ராஜ், அவர் மனைவியாக ரேவதி, காதலியாக அர்ச்சனா நடித்துள்ளனர்.

    அடுத்தப் படம்

    அடுத்தப் படம்

    ஈஸ்வரி ராவ், செய்தியாளராகவும், நாசர் காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளனர். அரவிந்த் சித்தார்த்தா இசை அமைத்திருந்த இந்தப் படத்துக்கு காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. இதற்கு பிறகு அடுத்தப் படத்தை உடனடியாக ஆரம்பிக்காமல் இருந்த எம்.ஆர்.பாரதி, செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறார்.

    எழுத்தாளர் நரன்

    எழுத்தாளர் நரன்

    'இதுவும் சிறுகதையில் இருந்து எடுக்கப்பட்ட கதைதான். எழுத்தாளர் நரன் எழுதிய தேடல், மரிய புஷ்பத்தின் சைக்கிள்கள் என்ற இரண்டு சிறுகதைகளையும் இணைத்து திரைக்கதை அமைத்துள்ளோம். வழக்கமானப் படமாக இல்லாமல், வித்தியாசமானதாக இந்தப் படம் இருக்கும். செப்டம்பர் மாதத்தில் ஷூட்டிங் தொடங்க திட்டம் வைத்துள்ளோம்' என்கிறார் இயக்குனர் எம்.ஆர்.பாரதி.

    நடிகர், நடிகைகள்

    நடிகர், நடிகைகள்

    இதை மணப்பாடு பின்னணியில், அதாவது கடற்கரையோர கிராமத்துப் பின்னணியில் எடுக்க இருக்கிறார்கள். இந்த லாக்டவுன் நேரத்தில் படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வருகின்றன. நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் முடிவாகவில்லை. எழுத்தாளரும் கவிஞருமான நரனின் வாரணாசி உட்பட மேலும் இரண்டு சிறுகதைகள் சினிமாவாக எடுக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    M.R.bharathi to direct a village story in his next.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X