“ஏன் ‘mr.லோக்கல்’ தலைப்பு?”... இயக்குநர் ராஜேஷ் கூறும் காரணங்கள்!
Recommended Video

சென்னை: சிவகார்த்திகேயன் - நயன்தாரா படத்திற்கு மிஸ்டர் லோக்கல் என பெயர் வைத்தது எதற்காக என்பது குறித்து இயக்குநர் ராஜேஷ் விளக்கமளித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கும் படம் மிஸ்டர் லோக்கல். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.
இதுவரை எஸ்கே 13 எனக் குறிப்பிடப்பட்டு வந்த இந்த படத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர், 'மிஸ்டர் லோக்கல்' என பெயரிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் படத்தின் தலைப்புடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தனது படத்திற்கு ஏன் மிஸ்டர் லோக்கல் என பேர் வைத்தேன் என இயக்குநர் ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

பொருத்தமான தலைப்பு:
இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்த படத்துக்காக பல்வேறு தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த படத்தின் கதைக்கு "மிஸ்டர் லோக்கல்" என்கிற தலைப்பு தான் பொருத்தமாக இருக்கும் என்பது எங்கள் அனைவரின் ஏகோபித்தக் கருத்தாகும்.

பாசிடிவ் சக்தி:
எங்கள் கதாநாயகன் சிவகார்த்திகேயன் திரையில் தரும் சக்தி மிகவும் பாசிட்டிவானது. இதை பார்க்கும் போது, ஒரு இயக்குநராக அவருடன் போட்டி போட வேண்டும் என்கிற ஆசை தூண்டப் படுகிறது.

நயன் ஒரு அதிசயம்:
கதாநாயகி நயன்தாரா ஒரு அதிசயம்.திரையில் அவர் அற்புதங்கள் செய்கிறார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா எங்களுக்கு ஒரு மிக பெரிய தூண். அவரது செயல் திறனும், ஒரு கடை நிலை தொழில் நுட்ப கலைஞரிடம் கூட அவர் வைத்து இருக்கும் தொழில் ரீதியான உறவு அவரது வெற்றிக்கு விதை என்றால் மிகை ஆகாது.

கோடை விடுமுறை ரிலீஸ்:
மிஸ்டர் லோக்கல் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. போஸ்ட் புரோடக்ஷன் பணிகளும் நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. கோடை விடுமுறைக்கு "மிஸ்டர் லோக்கல்" திரைக்கு வர ஏற்பாடுகள் துரித வேகத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது" என அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











