SMS 2 :இரண்டாவது பாகத்திற்கு தயாராகும் அடுத்த வெற்றிப்படம்.. இது சூப்பர் அப்டேட்டா இருக்கே!

சென்னை : நடிகர் ஜீவா, சந்தானம், அனுயா, ஊர்வசி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து சூப்பர் ஹிட்டடித்த படம் சிவா மனசுல சக்தி.

90ஸ் கிட்ஸ்களுக்கு செம மாஸான யூத்புல்லான படமாக வெளியானது சிவா மனசுல சக்தி. இந்தப் படத்திற்கு பக்கபலமாக அமைந்தது சந்தானம் காமெடி.

யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட்டாக இன்றளவும் அமைந்துள்ளது.

Director M Rajesh going to direct Sequel of Siva manasula sakthi movie with Jiiva

2வது பாகத்திற்கு தயாராகும் சிவா மனசுல சக்தி படம் : கடந்த 2009ம் ஆண்டில் காதலர் தின ஸ்பெஷலாக ரிலீசான படம் சிவா மனசுல சக்தி. இயக்குநர் ராஜேஷின் அறிமுகப்படமான இந்தப் படத்திலேயே அவர் அதிகமாக ஸ்கோர் செய்திருந்தார். காதல், காமெடி உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட்டடித்தது. படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் காமெடி, கதக்களி ஆடியது. ரசிகர்களையும் கட்டிப் போட்டது. ஜீவா, அனுயா, சந்தானம், ஊர்வசி போன்றவர்கள் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

ஆர்யா, ஆன்ட்ரியா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து படத்திற்கு மெருகூட்டினர். ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒரு பீலிங் மச்சி என்று சொல்லி சொல்லியே, சந்தானத்தை வெறுப்பேற்றுவார் ஜீவா. அவரது அலட்டிக் கொள்ளாத நடிப்பு அந்தக் கேரக்டருக்கு மட்டுமில்லாமல் படத்திற்கும் கூடுதல் பலம் சேர்த்தது. படத்தை அதன் போக்கிலேயே இயல்பாக கொண்டு சென்று, இயல்பாகவே முடித்திருப்பார் ராஜேஷ். படத்தின் கிளைமாக்ஸ் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது.

இந்தப் படத்தின் அடுத்தபாகம் குறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்து ரசிகர்களிடையே காணப்பட்ட நிலையில், தற்போது படத்தின் அடுத்த பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது பா விஜய்யின் வரலாற்று படத்தில் நடித்துவரும் ஜீவா, அந்தப் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு ராஜேஷ் படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே ஜெயம்ரவியை இயக்கி வருகிறார் இயக்குநர் எம் ராஜேஷ்.

Director M Rajesh going to direct Sequel of Siva manasula sakthi movie with Jiiva

இந்தப் படத்தின் இறுதி ஷெட்யூர் வரும் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளது. இந்த பைனல் ஷெட்யூல் நிறைவடைந்தவுடன், சிவா மனசுல சக்தி படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை ராஜேஷ் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம் ராஜேஷின் முதல் படமான சிவா மனசுல சக்தி படம், ரசிகர்களுக்கு மிகவும் பிரெஷ்ஷான பீலிங்கை கொடுத்தது. அந்த வகையில், படத்தின் இரண்டாவது பாகமும் ரசிகர்களை கவருமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜெயம் ரவியின் 30வது படத்தைதான் தற்போது இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டில் பூஜையுடன் துவங்கியது. படத்தில் ஜெயம்ரவியுடன் பிரியங்கா மோகன், நட்டி, விடிவி கணேஷ் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள நிலையில், படத்தின் சூட்டிங் வெகு மும்முரமாக நடைபெற்றது. இந்நிலையில், படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X