ஜீவாவும் ரெடி.. ஸ்கிரிப்டும் ரெடி.. சிவா மனசுல சக்தி 2 படத்தை கையிலெடுக்கும் டைரக்டர் ராஜேஷ்!

சென்னை: இயக்குனர் எம் ராஜேஷ் -ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிரதர். இந்த படம் தீபாவளி கொண்டாட்டமாக இம்மாத இறுதியில் ரிலீசாகவுள்ள நிலையில் ராஜேஷ் உள்ளிட்ட படக் குழுவினர் அடுத்தடுத்த படத்தின் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். படத்தின் ப்ரோமோஷன்களுக்காக அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார் ராஜேஷ்.

முன்னதாக பிரதர் படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு நடத்தப்பட்ட நிலையில் தற்போது ராஜேஷ் கொடுத்துள்ள பேட்டியில் முன்னதாக அவரது இயக்கத்தில் வெளியான சிவா மனசுல சக்தி படத்தின் 2வது பாகத்தை அடுத்ததாக கையிலெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டில் ஜீவா, வினயா, சந்தானம், ஊர்வசி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டடித்த படம் சிவா மனசுல சக்தி.

jayam ravi m rajesh siva manasula sakthi 2 movie 2


பிரதர் படம்: இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள பிரதர் படத்தில் ஜெயம் ரவி லீட் கேரக்டரில் நடித்துள்ளார். அவருடன் பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள இந்தப்படம் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதர் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இயக்குனர் எம் ராஜேஷ் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையயொட்டி அடுத்தடுத்த பேட்டிகளில் பிரதர் படம் குறித்தும் நடிகர் ஜெயம்ரவி, பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் குறித்தும் ராஜேஷ் பல சுவாரஸ்யங்களை தெரிவித்து வருகிறார்.

சிவா மனசுல சக்தி 2 படம்: முன்னதாக எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா, சந்தானம், ஊர்வசி, வினயா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த சிவா மனசுல சக்தி படம் கடந்த 2009ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து காமெடி கலாட்டா செய்தது. சூப்பர் ஹிட் படமாகவும் வசூலில் மாஸ் காட்டியது. இந்நிலையில் தற்போது பிரதர் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேசிய எம் ராஜேஷ், சிவா மனசுல சக்தி படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கும் எண்ணம் குறித்து பேசியுள்ளார். இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

ஓகே சொல்லிய ஜீவா: சிவா மனசுல சக்தி 2 படம் குறித்து நடிகர் ஜீவாவிடமும் தான் பேசியுள்ளதாக ராஜேஷ் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதியில் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் படம் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக சிவா மனசுல சக்தி 2 படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2009ம் ஆண்டில் வெளியான சிவா மனசுல சக்தி படத்தில் காமெடியில் ஜீவா மற்றும் சந்தானம் இணைந்து அதுகளம் செய்திருப்பார்கள். தொடர்ந்து 2010ம் ஆண்டில் ஆர்யா -சந்தானம் கூட்டணியில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் படமும் மிகப்பெரிய ஹிட்டடித்தது.

ரசிகர்களின் எவர்கிரீன் ஃபேவரிட் படம்: இந்தப் படங்களை தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்திருந்தார் எம் ராஜேஷ். தற்போது பிரதர் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீசை தொடர்ந்து அவர் எந்தப் படத்தை இயக்குவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்த நிலையில், தற்போது சிவா மனசுல சக்தி 2 படம் குறித்து அவர் பேசியுள்ளார். இந்தப் படம் ரசிகர்களின் எவர்கிரீன் ஃபேவரிட்டாக உள்ள நிலையில், இரண்டாவது பாகம் எப்படி அமையும், ஜீவாவுடன் காமெடி கலாட்டா செய்ய யார் இணைவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X